கோவிந்தா………..!!!

எழுத்தாளர் : சிவகௌதம்மின்னஞ்சல் முகவரி: sivagowtham90@gmail.comBanner


நான் நேரம் பார்த்தேன். அது என் அவசரம் விளங்காமல்இ விவஸ்தையே இல்லாமல் 8.15 என்று காட்டியது. 8.40க்கு இன்னும் அரை மணித்தியாலம் கூட இல்லை. வெளிக்கிடும் நேரம் வந்து கதைத்து கழுத்தறுத்த அந்த வாய்க்குள் நுழையாத பெயர் வைத்திருக்கின்ற சிங்கள சப் கொன்றாக் காரனை மானசீகமாக திட்டிக் கொண்டுஇ நான் கிட்டத்தட்ட ஓட ஆரம்பித்தேன்.


வாசலை நெருங்கிஇ அந்த அனகோண்டா நீள லைனை பார்த்த போது தான் எனக்கு ஞாபகம் வந்தது. 
“அட...... இண்டைக்கு வெள்ளிக் கிழமை. இண்டைக்கு நான் போன மாதிரித் தான்.” 
அந்த ஏதோ பெயர் சப் கொன்றாக் காரன்இ கெட்ட வார்த்தைகளால் என்னிடம்  அர்ச்சனை வாங்க ஆரம்பித்திருந்தான். ஒரு மாதிரி கஸ்ரப்பட்டு என் கணித திறமையை எல்லாம் பயன்படுத்திஇ அந்த அனகோண்டாவை தாண்டிஇ கவுண்டரை தொட்டு……

“யாப்பாணய எக்காய்….”

அந்த “ய்”யின் இழுப்பில் இவன் பச்சை யாழ்ப்பாணத்தான் என்று அவன் சந்தேகமே இல்லாமல் முடிவெடுத்திருப்பான். ஆனால் அவனின் முடிவுகளை கண்டுகொள்ளும் மன நிலையில் நான் இல்லை. ஏனென்றால் இப்போது நேரம் 8.35ஐ தாண்டிக்கொண்டிருந்தது.

“இந்த இழவு விழுந்தவங்கள். இண்டைக்கெண்டு பாத்து சரியான நேரத்துக்கு கொண்டுவந்து அடிச்சிடுவாங்கள்”

சம்பந்தமே இல்லாமல் அவர்களை திட்டிக் கொண்டு அந்த ஊதா நிற 320 ரூபா காட்டை காட்டி உள்நுழைந்துஇ இவ்விரண்டு படிகளாக தாவி ஏறிஇ கிடைத் தளத்தில் உசைன் போல்ட்டை ஓவரேக் பண்ணிஇ பத்து பத்து படிகளாய் தாவி இறங்கிஇ தூரத்தில் வெறும் தண்டவாளங்களுடன் இருந்த அந்த ஆறாம் இலக்க பிளற்போமை பார்த்த போதுஇ ‘நயன்தாராவும் பிரபுதேவாவும் பிரிந்துவிட்டார்கள்’ என்ற செய்தியை கேட்டவுடன் அடைந்த திருப்தியை நான் மீண்டும் அடைந்தேன். அந்த திருப்தியை சில நிமிடங்களிலேயே கெடுக்க பிளட்போம் முழுவதும் விக்னேஸ் சிவன் போல நின்றிருந்தது வெள்ளிக் கிழமைச் சனக் கூட்டம்.


இந்த அவசரத்திலும் நம்மவர்களைப் பற்றி ஒரு சின்ன இன்ரடக்சன் சொல்ல வேண்டும் போல எனக்கு இருக்கிறது. நம்மவர்களுக்கு சனிஇ ஞாயிறு அல்லது ஏதாவது இரண்டு நாட்கள் சேர்ந்தாபோல ஒரு லீவு கிடைத்துவிட்டால் போதும். வெளியூரில் இருக்கின்ற எல்லாரும் மூட்டைமுடிச்சைக் கட்டிக் கொண்டு ஊருக்கு கிளம்பி விடுவார்கள் (என்னையும் சேர்த்துத் தான்). இரண்டு நாட்களும் முழு கட்டு கட்டுவார்கள். ஊர் வம்பு அளப்பார்கள். ‘படம்’ பார்ப்பார்கள். மிக அபூர்வமாக சிலர் உருப்படியாய் ஏதாவது செய்வார்கள். மீண்டும் தங்கள் தங்கள் வெளியூர்களுக்கு திரும்பி விடுவார்கள். அவர்களிடம் போய் யாழ்ப்பாணம் பற்றி ஐந்து வசனம் சொல்லச் சொன்னால்இ “அப்படி என்றால் என்ன?” என்று கேட்பார்கள். அவ்வளவு தான். 
தற்காலிக சுடிதார்கள்இ ‘இஞ்சருங்கோ’ என்ற அளவுக்கு இல்லாவிட்டாலும் ஒரு கொஞ்சலான யாழ்ப்பாணத் தமிழ்இ மெல்லிய சாராய மணம்இ வெற்றிலை குதப்பிய வாய்கள்இ கரை தெரியக் கட்டிய வேட்டிகள்……. ஒரு மினி யாழ்ப்பாணமாகவே மாறியிருந்தது அந்த பிளட்போம். ஒரு கொய்யாப்பழ வியாபாரிஇ சேட் ‘இன்’ பண்ணிய ஒரு வொரண்ட் பயணிஇ லப்ரொப்பை முதுகில் சுமந்தபடி ஒரு கம்பஸ் கூட்டம்இ “வீல்” என்று கத்தும் குழந்தையை சமாதானப்படுத்தி களைத்துப் போய் பாவமான ஒரு அப்பா….. இவர்களையெல்லாம் அலட்சியமாக கடந்துகொண்டு நான் அந்த பிளாற் போமின் எல்லையை நோக்கி நடந்துகொண்டிருந்தேன். ரயில் நிற்கும் இடத்தைத் தாண்டி எங்கேயோ நடந்து கொண்டிருக்கின்ற என்னை ஒரு மூளை இல்லாதவன் என்று யாரும் நினைக்கிறார்கள் என்றால் (நீங்கள் உட்பட) அவர்கள் யாழ்தேவியின் மூன்றாம் வகுப்பில் பயணம் செய்து பழக்கப்படாதவர்கள் என்று தீர்மானமாக முடிவெடுத்துக் கொள்ளலாம். ஏனெனில்   யாழ்தேவியின் மூன்றாம் வகுப்பின் நிரந்தர பயணிகளுக்கு மட்டுமே தெரியும்இ இது ஒரு தந்திரோபாயமான முன்னகர்வு என்று. ஆம். எல்லோரும் ரயிலின் நடுப்பகுதிக்கே இலக்கு வைப்பதால்இ எஞ்சினுக்கு அடுத்ததாய் இருக்கின்ற ஒரு சில மூன்றாம் வகுப்பு கம்பாட்மெண்டுகள் எப்போதும் தேடுவாரற்றே இருக்கும். இப்போது உங்களுக்கு விளங்கியிருக்கும் எனது முன்னகர்வினுள் மறைந்திருக்கின்ற ராஜ தந்திரம்.


வருகிற போகிறவர்கள் எல்லாம் இப்போது ‘கெலிகொப்டர் n~hட்’ அடிப்பது போல இந்த ரெக்னிக்கை இப்பவெல்லாம் நிறைய பேர் பழகிவிட்டார்கள். ஏனென்றால் எனது ராக்கற் பகுதிக்குள்ளேயே முப்பதுக்கும் குறையாமல் ஆட்கள் இருந்தனர். இவர்களுடன் போட்டி போட்டு யாழ்தேவியில் ஒரு யன்னல் சீற் பிடிப்பதென்பது கம்பசில் இரண்டாம் செமெஸ்டர்  தேமோ டைனமிக்ஸ் பாடத்துக்கு ‘ஏ’ றிசள்ஸ் எடுப்பது போன்றது. குதிரைக் கொம்பு தான். (தேமோ டைனமிக்சின் வீரியம் பற்றி படித்தவர்களிடம் கேட்டறிக)
நேரம் 8.50ஐ அண்மித்துக் கொண்டிருந்தது. ரயில் இன்னமும் வந்தபாடாய் இல்லை. நான் என் பையை அருகில் வைத்துவிட்டு போனை நோண்ட ஆரம்பித்தேன். சில நிமிடங்களில் கொச்சை ஆங்கிலத்திலும்இ அதைவிட கொச்சையான தமிழிலும்இ தெளிவான சிங்களத்திலும் யாழ்தேவியின் வரவு அறிவிக்கப்பட திடீர் பரபரப்பானது நம் ஆறாம் நம்பர் பிளற்போம். 


ரயில் வருகின்ற இந்த அவசர நேரத்திலும் ரயில் தொடர்பான எனது அனுபவத்தை உங்களிடம் நான் காட்டியே ஆக வேண்டும். சாதாரணமாக ரயில் வரும்போது பிளற்போமின் நுனியில் நிர்க்க முடியாது. சில விஞ்ஞான காரணங்களால் அப்படி நிற்பவர்கள் ரயிலை நோக்கி இழுக்கப்பட்டு விடுவார்கள். (அந்த விஞ்ஞான காரணங்களை இங்கு விபரித்தால்இ இது ஒரு விஞ்ஞான கட்டுரை ஆகிவிடும். எனவே அதனை இங்கு தவிர்த்து விடுகிறேன்.) மேலும் ரயில் அவர்களை நெருங்க முதலிலேயே அவர்கள் தானாகவே இயல்பாக பின்வாங்கி விடுவார்கள். இதுஇ என்போன்ற சில  அனுபவசாலிகளுக்கு மட்டுமே சரியான விளக்கத்துடன் தெரிந்திருக்கின்ற விடயம். எனவே அப்படி நுனியில் ஒருவர் நிற்ப்பாரானால் அவர் ரயில் பயணத்துக்கு புதியவர் என்று இலகுவாக அனுமானித்து விடலாம். 


இங்கு நானும் என்போன்ற சில அனுபவசாலிகளும் ஒதுங்கி நிர்க்க மற்றவர்கள் தேமோ டைனமிக்சுக்கு ‘ஏ’ எடுக்கும் நோக்கில் முன்னேறி நின்றார்கள். யாழ்தேவி ஆடி அசைந்து வந்து அமர்முடுகி ஓய்வுக்கு வந்தது. ஊர் கோயில்களில் பிரசாதத்துக்கு முட்டிமோதுவது போல கிட்டத்தட்ட எல்லோருமே யன்னல் சீற்றை ராக்கற் வைத்து தங்கள் நகர்வை மேற்கொண்டார்கள். நான் என் முன்அனுபவங்களை எல்லாம் அதி உச்சமாக பயன்படுத்தி என் தாக்குதலை முன்னகர்த்தினேன். அந்த தாக்குதலின் விளைவாக நான் கம்பசில் தேமோ டைனமிக்சுக்கு ‘ஏ’ எடுக்காவிட்டாலும் கூட இந்த யாழ்தேவியின் யன்னல் சீற் ஒன்றைக் கைப்பற்றி விட்டேன். முதல் புறபோசல்லிலேயே பச்சைக் கொடி கிடைத்துவிடுவதை விட இந்த யன்னல் சீற்றை கைப்பற்றுகின்ற போது ஏற்படுகின்ற சுகம் அலாதியானது. சிலவற்றையெல்லாம் விபரிக்க முடியாது. அனுபவித்தால் மட்டுமே உணர முடியும்.


இடத்தை கைப்பற்றியாகிவிட்டது. இனி அதை பிரச்சினைகள் இல்லாதவாறு நிலைப்படுத்த  வேண்டும். நம்மவர்களில் பலர் விட்டஇ விடுகின்ற பெரிய பிழை இது தான். அதற்கு முக்கியமாக பக்கத்தில் இருப்பர் அதிகம் பேச்சுக் கொடுக்காதவராக இருக்க வேண்டும். அதெல்லாம் மிக அபூர்வமாகத் தான் கிடைக்கும். அடுத்தது அவர் அனுராதபுரம் அல்லது மதவாச்சிக்கு முன்னர் இறங்குபவராக இருக்க வேண்டும். அப்படியானால் தான்இ அவர் எழுந்ததும் அப்படியே விழுந்து படுத்துவிட முடியும். இல்லையென்றால் நாளை முழுவதும் இந்த ரயின் பயணத்தை உடம்பின் ஏதோவொரு பகுதி ஞாபகப் படுத்திக் கொண்டே இருக்கும். இவற்றிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கான முதலாவது பாதுகாப்பு கவசம் இயர் போன். இந்த தொலைநோக்கு திட்டங்களுடன் எனக்கு பக்கத்திலிருந்தவரை நோட்டமிட்டவாறு என் இயர் போனை காதில் செருகினேன். பாலசுப்ரமணியம் “ஈர நிலா…..” என்று பாடத் தொடங்கினார். பக்கத்தில் இருந்தவர்இ ஒரு சாயலில் எனக்கு ‘நட்புக்காக’ விஜயகுமாரை ஞாபகப் படுத்தினார். என்ன… கொஞ்சம் கறுப்பாய் இருந்தார். 


“இந்தாள் குறைந்தது வவுனியா வரையாவது வந்து தொலைக்கப் போகிறது. இண்டைக்கு என்ர நாரி சரி….” - என் ஆள்மனம் எதிர்காலத்தை எதிர்வு கூறியது.


பாலசுப்ரமணியம் இன்னும் பல்லவியைக் கூட முடிக்கவில்லைஇ பக்கத்தில் இருந்த அந்த கறுப்பு விஜயகுமார் என்னைத் தட்டி,

“தம்பிஇ நீங்கள் யாழ்ப்பாணமே ? நானும் அங்க தான்….”

“ஓமோம்…” என் ஒட்டுமொத்த கடுப்பும் அந்த ஒற்றைச் சொல்லில் அப்பட்டமாக தெரிந்தது. அவர் என் பதிலையோ அல்லது என் கடுப்பையோ பெரிதாய் கண்டு கொள்ளாமல்,

“தம்பிஇ நீங்கள் பாக்க படிச்சாள் போல இருக்கிறியள். சம்பந்தர் சொல்லுறதோ அல்லது விக்கியர் சொல்லுறதோ சரி. நீங்கள் சொல்லுங்கோ பாப்பம்…?” என்று தன் அடுத்த கணையை தொடுத்தார்.
இது கொஞ்சம் சிக்கலான விசயம். ஏனென்றால் இதற்கான விடையை கொஞ்சம் மாறி சொன்னாலும்இ நான் காதுக்குள்ளால் ரத்தம் வந்து சாவதற்கு கூட சந்தர்ப்பம் இருக்கிறது. இதை கொஞ்சம் ரெக்னிக்கலாய்த் தான் கையாள வேண்டும். எனவே நான் ஒரு முடிவுக்கு வந்தேன். அனுபல்லவியின் நடுவிலேயே “ஈர நிலாவை….” நிறுத்திவிட்டு ஒரு நீண்ட தாக்குதலுக்கு தயாரானேன். இருந்தாலும் “இந்தாள் அதை மறந்திருக்கும்…” என்ற நப்பாசையுடன் விஜயகுமாரை பார்த்தேன். அவரோ என் பதிலுக்காக மிக ஆவலுடன் காத்திருந்தார். 
மனிதர் ஒரு முடிவோடு தான் இருக்கின்றார் என்று நினைத்துக் கொண்டு, 
“பண்டா-செல்வா ஒப்பந்த காலத்தில செல்வநாயகம் ஐயா சொன்னதை வைச்சு பாக்கேக்க….” என்று என் ஓப்பனிங் ஷாட்டை அடித்தேன். மனிதர் கொஞ்சம் வெலவெலத்துத் தான் போனார். மேலும் நான் மிடிள் ஓடரில் நியூட்டனின் விதியையும் பின்சிங்கிற்கு நெப்போலியனையும் வைத்திருக்கின்ற விசயம் அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. 

எது எப்படியோஇ இன்றைக்கு எனக்கு அல்லது இந்த கறுப்பு விஜயகுமாருக்கு அல்லது நம் இருவருக்குமேஇ இடைக்கால இளையராஜா மியூசிக் போல இருக்க வேண்டிய இந்த ரயில் பிரயாணம் கோவிந்தாhhh…..!!! தான்.

                      

Views: 592