உவங்களை பற்றி இவங்களிடம் இருந்து………!

எழுத்தாளர் : உவங்கள்மின்னஞ்சல் முகவரி: editor.uvangal@gmail.comBanner


“எல்லார்ரை கண்டு குட்டியும் ஓடுதொண்டு சுப்பர்ரை பேத்தை குட்டியும் ஓடிச்சுதாம்" இது எமது சூழலில் அடிக்கடி கேள்வியுறும் பழமொழி, ஆனால் சுப்பரின் கன்று குட்டியின் முயற்சி பற்றியும் அதன் தன்னம்பிக்கை பற்றியும் நாம் எவரும் சிந்திப்பதே இல்லை. அதை பற்றி பேசிக் கொள்வதும் இல்லை. ஏனைய கன்று குட்டிகளின் வீரத்தை பேசி சிலாகித்துக் கொள்வதை வழமையாக கொண்ட எமக்கு சுப்பரின் கன்றுகுட்டிகளாக பலரை இங்கு மாற்றிக் கொண்டிருக்கிறோம் என்பதை ஏற்க மறுக்கிறோம். உண்மையில் கவனிக்கபட வேண்டியவையும் பாராட்டபட வேண்டியவையும் இந்த வகை கன்று குட்டிகளோ. அதற்கு எம்மிடம் மாறுபட்ட பார்வையும் வியாபார உத்தியும் விளம்பர மோகமும் அற்ற சிந்தனை வேண்டும். புதிய வகையில் சிந்திக்கவும் ஆக்கபூர்மான கருத்துக்களை முன்வைப்பதற்கும் நாம் தயாராகவும் அதற்கான  சந்தர்பங்களையும் நாம் ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். அவ்வாறு ஏற்படுத்தப்படும் சந்தர்ப்பம் குறைந்த பட்சம் நூறு பேரையாவது சென்றடையவேண்டும். இன்று லட்சம் பேரிடம் தகவல்களை கொண்டுசேர்ப்பிக்கும் இணையம் இவ்வாறான சிந்தனைகளுக்கும் பெரிதும் துணைபுரிகிறது.   

இணையத்தின் துணை கொண்டு எம்மால் ஏற்படுத்தப்பட்ட “உவங்கள்|| இணையவழி சஞ்சிகை கலை இலக்கிய சிந்தனை கொண்டவர்களின் ஆக்கங்களை தாங்கி வருகிறது. இது “ஆக்கபூர்வமான இலக்கிய ஆளுமைகளை உருவாக்கல்|| என்பதை முதன்மை இலக்காக கொண்டு செயற்படவிருக்கிறது. இச்சஞ்சிகையில் இது எமது சிறு முயற்சி முதல் படி. இச் சஞ்சிகை, கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், நேர்காணல் என வழமையான இலக்கிய வடிவங்களை கொண்டு நிரப்பபட்டு வந்தாலும் அதன் உள்ளடக்கங்களில் மாறுபட்ட தன்மையினை கொண்டே காணப்படுகிறது என்பதை நீங்கள் படைப்புகளுடன் பயணிக்கையில் உணர்ந்து கொள்ளுவீர்கள் என நம்புகிறோம். குறுகிய நேரத்தில் “உவங்கள்” இணைய சஞ்சிகைக்கு ஆக்கங்கள் தந்துதவிய அனைத்து படைப்பாளிகளுக்கும் நன்றி கூறுவதுடன். “உவங்கள்” இணையத்தினை வடிவமைத்து தந்த திஷோபன் சந்திரமோகன் மற்றும் கேசிகன் கந்தராஜா அவர்களுக்கும், உங்களுக்கான சின்னத்தினையும் இம்மாத இதழின் முகப்பு பக்கத்தினையும் வடிவமைத்து தந்த கனிஸ்கர் ரவீந்திரன் அவர்களுக்கும், இம்மாத இதழின் பதிவேற்றத்தினை மேற்கொண்ட துவாரகன் பேரின்பநாதன் அவர்களுக்கும்  எமது நன்றிகள். மேலும் இச் சஞ்சிகை தொடர்பான கருத்துக்களை வாசகர்களிடம் இருந்து எதிர்பார்த்துக் கொண்டு அடுத்த வெளியீட்டில் உங்களை உவங்களின் வழி சந்திக்கிறோம் 


நன்றி

தொகுப்பாசிரியர்கள்
editor.uvangal@gmail.comViews: 551