என்னிடமே கொடுத்துவிடுங்கள்.....

எழுத்தாளர் : ராஜா நர்மிமின்னஞ்சல் முகவரி: rajanarmi0@gmail.comBanner

எனக்கு சேர வேண்டியதை
என்னிடமே கொடுத்துவிடுங்கள்
அது எனக்காக படைக்கப்பட்டது
அவற்றில் என் பெயர்
தான் எழுதப்பட்டுள்ளது
அதனாலேயே சொல்கின்றேன்

என்னை போல் அதன்
நலன்களை,பிரியங்களை
ஸ்பரிசங்களை உங்களால்
முழுமையாக அனுபவிக்க முடியாது

என் கைகள் பட்டு மலர்ந்து
மடிய வேண்டிய ஒவ்வொன்றையும்
வலுக்கட்டாயமாக ஆக்கிரமிப்பதில்
என்ன சந்தோஷம் இருந்துவிட
போகின்றது???

எனக்காக பெயர் குறிக்கப்பட்ட
அந்த மலர்....
எனக்காக பெயர் குறிக்கப்பட்ட
அந்த நட்பு....
எனக்காக பெயர் குறிக்கப்பட்ட
அந்த காதல்...
எனக்காக பெயர் குறிக்கப்பட்ட
அந்த உடை...
எனக்காக பெயர் குறிக்கப்பட்ட
அந்த தொழில்...
எனக்காக பெயர் குறிக்கப்பட்ட
அந்த கை,அந்த மார்பு
இவற்றை வலுக்கட்டாயமாக
கையகப்படுத்தி கொள்வதில்
என்ன சுகம் கிடைத்துவிட
போகின்றது?

எனக்கானது என்னிடமிருந்து
தூரப்படுத்தப்படும் போதெல்லாம்
அதன் இயல்பு மாறி
திரிபடைந்து வாழும்
வாழ்க்கையை இன்னும்
உணர முடியாதவராகவா
நீங்கள் இருக்கின்றீர்கள்??

இன்னும் சொற்ப நாட்களில்
அல்லது சில வருடங்களில்
நீங்களாகவே எனக்கானது
உங்களுக்கானதில்லையென
புறக்கணித்து இன்னும் ஒருவரின்
பெயர் குறிக்கப்பட்ட உணர்வுகள்,
உடமைகளை ஆக்கிரமிக்கும்
செயல்களில் மும்முரமாகுவீர்கள்

எனக்கான உணர்வுகள்,
எனக்கான உடமைகள்,
எனக்கான உறவுகள்,
எனக்கென படைக்கப்பட்ட
அவைகள் சபித்துக்கொண்டே
அழிந்து போகும் உங்களை....


Views: 426