இலையுதிர்கால நாட்குறிப்புக்கள்

எழுத்தாளர் : கௌதமி - யோமின்னஞ்சல் முகவரி: ygowmi123@gmail.comBanner

உயிர்வெளியில் நிகழ்வோடை
நிகழ்ந்துகொண்டே நகர்கிறது
நினைவைப் பெருக்கினேன்
பிறப்பின் முதல் அழுகை
என்னுள் வீறிடுகிறது
புலப்படாத புலக்காட்சிகள்
கண்ணிற்குள் மின்னலிடுகின்றன
வீரியக் கர்ப்பத்தில்
விளைந்த பயிர் இவளென
காலத்தின் காதில்
கதறிக் கரைகின்றேன்
00
அச்சமுறாதே
மெய்யிற்கே அழிவு
என் ஆத்மம்
அழிவில்லாப் பெருங்சுவாலை
நின்று உயிர்க்கும் எரிமலை
மௌனமே என் சன்னதம்
என் உதடுகளை உடைக்காதே
நீ புறப்படு
நீள்தூரப் பயணம் எனது
நின்று நிதானிக்க நிமிடம் இதுவல்ல
நிலவியலின் கறைபோல்
நிலைப்பியலின் குறை நான்
00
நான் சர்ப்பத்தின் விசநாக்கு
துரதிஸ்டத்தின் ஊற்றுக்கண்
நதி மையச்சுழல்போல்
என்னைச் சூழ்ந்துகொள் மரணமே
உன் காலடியில் வீழேன்
உன் கரமெதிர்த்து வாழ்வேன்
என் பால்ய இலைகள் சருகானாலும்
புதைந்து மீண்டெழுவேன்...Notes Of Autumn Days

.........................

Stream of incident

happening in the space of soul

I enhanced the memory

The first cry of birth

screaming into me

Invisible scenes are

flashing in my eye

I screaming and melting

that

"I grown up in the womb of time"

in the ear of period

00

Don't get fear

Destruction only to body

My soul is

Immortality flame,

surviving volcano

silence is my fury

You depart!

my journey is long

This is not time to discern

I'm the blot of stability

like

the stain of the moon

00

I'm the vicious tongue of snake

I'm the source of unfortunates

Oh death!

surround me

I never fall in your feet 

I'll live by oppose your hand

Even my teenage  became dried leaf 

I arise again after buried!

Views: 373