உடைந்த கிண்ணம்

எழுத்தாளர் : திவ்யா தமிழவள்மின்னஞ்சல் முகவரி: chethivya@gmail.comBanner

பன் வருட தூசி சுமந்தபடி
யன்னல் துரு உரசியே
ஓர் உடைந்த கிண்ணம்
உடைதுகள் விழுங்கியபடி 
எரி சூரியனையும் , நடுநிசி நிலவையும் 
தன்னுள் நிரப்பி வழிகிறது
மதி கழுவு மேகங்களையும் தான்

வாய் விளிப்பதிலே
ஓர் வண்டு உடை சிறு கோது
அதில்
தென்றலிசை கோர்த்து
மெல்லிதாய் ஒரு சிலிர்ப்பு
உடை துண்டு தடவி 
ஒரு சில முத்துக் குண்டுகள் 
தடவிய வரிகளிலெல்லாம்
அறுத்தெறியப்பட்ட சுவடுகள்

உடை துண்டு கொண்டு 
மீள உருக்கொணர்ந்தாலும்
உடைந்த உறவின்
ஓர்
ஆழப்பதிவரி ஓட்டம்

கைப்பிடியுடன் உறவாடிய
ஓராயிரம் உறவுகளுக்கு
அன்புநெடி நாறும்
கைரேகைகள் சாட்சி

மீண்டும் ஓர் உடைவு
முழுதாய் ஒர் சிதைவு
முற்றுமுழுதாய் வேண்டும் 
அடையாளம் ஏதுமின்றி
Views: 336