வான் கதவு திறக்கப்பட்டது

எழுத்தாளர் : தயானி விஜயகுமார்மின்னஞ்சல் முகவரி: dayani3vijayakumar@gmail.comBanner

அடக்கவே முடியாததை அடக்கி 
தொடைகளை ஒடுக்கி
ஒதுக்குப்புறத்தை ஓரக்கண்ணில் தேடியவாறு 
அரும்பு கொய்தது அந்த அரும்பு.
கங்காணி பக்கத்தில்
கணக்குப்பிள்ளை அக்கத்தில்
எப்படிக் கழிப்பாள்?
எவ்வளவு நேரம் அடக்குவாள்?
'முத்தெலய எடுக்கிறியே
மூதேசி அறிவில்லையா' 
கங்காணியின் அடித்தொண்டை ஓசையது. 
ஓ...
முக்கித்திணறி அணைப்போட்டு
அடக்கி வைத்த நீர்த்தேக்கத்தின் 
வான் கதவு தானாக திறக்கப்பட்டது.
தொப்பையாய் நனைந்த அவள் துயர்
அவளுக்குள்ளே அடக்கமும் செய்யப்பட்டது. 


Views: 251