உவங்களை பற்றி இவங்களிடம் இருந்து.....!

எழுத்தாளர் : உவங்கள்மின்னஞ்சல் முகவரி: editor.uvangal@gmail.comBanner

உவங்கள் இணைய சஞ்சிகை வாசககர்கள் அனைவருக்கும் எமது புத்தாண்டு வாழ்த்துகள். இந்த ஆண்டில் அனைத்து வளங்களும் பெற்று ஆரோக்கியமாக நீங்கள் வாழ வாழ்த்துகின்றோம். சென்ற மாத உவங்கள் இதழுக்கும்  நீங்கள் வழங்கிய ஆதரவு எமக்கு பெரும் மகிழ்வைத் தந்தது. உங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி. கடந்த மாத இதழ் தொடர்பான உங்கள் கருத்துக்கள் அனைத்தையும் நாம் மதிக்கிறோம். அவற்றைக் கருத்தில் கொண்டு எம்மால் முடிந்தளவிற்கு மாற்றங்களைச் செய்திருக்கிறோம். மேலும் இவ்வருடத்தின் முதல் இதழான  இம்மாத உவங்கள் இதழும் வழமை போலவே பல ஆக்கங்களை தாங்கி வெளிவருகிறது. எழுத்துபிழைகளை  சரிபார்த்து உதவியவர்களுக்கு நன்றி கூறுவதுடன் இம்மாத உவங்கள் முகப்பு பக்கத்தை வடிவமைத்து தந்த  துவாரகன் பேரின்பநாதன் அவர்களுக்கும்  முகப்பு படத்தை வரைந்தது தந்த வல்லை சுலக்சன் அவர்களுக்கும் நன்றியைக் கூறிக் கொள்கிறோம். மேலும் இச் சஞ்சிகை தொடர்பான கருத்துக்களை வாசகர்களிடம் இருந்து எதிர்பார்த்துக் கொண்டு அடுத்த வெளியீட்டில் உங்களை உவங்களின் வழி சந்திக்கிறோம். உவங்களின் உறவுகள் அனைவருக்கும் இனிய தைத்திருநாள் வாழ்த்துகள்
Views: 337