ஆதியில் இருந்த ....

எழுத்தாளர் : மதுஷா மாதங்கிமின்னஞ்சல் முகவரி: 1989mathangi@gmail.comBanner

என்னை வடிவமைப்பதில் மீதமாகும் கேள்விகள்
கருகிய அரவமாகி என்னை பின்னிக் கொள்கிறது
அரவத்தின் கண்கள் எல்லாம் நானே 
பின் அரவம் முழுவதும் நானே
நான் அரவமாகி என்னை விழுங்குகையில்
தடித்த குரல் ஒன்று அரவத்தை கொன்றது
அரவத்தின் தோல் போர்த்தி குரல் மொழியானது
மெல்ல மெல்ல மொழி குரல்வளையை நெருங்குகையில்
மீட்புகளின் புனிதம் , பூச்சைக் கொஞ்சம் பூசி
இனி என்ன சொல்ல?
இரைச்சல் மிகு உலகுகிது  
என்னால் உணர மட்டுமே முடிகிறது
என் கண்கள்  ஆதியில் இருந்த அரவம் 
 
Views: 440