சிவப்பிடை

எழுத்தாளர் : தனுஸ்சயன் கருணாகரன்மின்னஞ்சல் முகவரி: Thanussayan@gmail.comBanner

11.58

என்னை 
பிளந்துகொண்டிருந்தார்கள்.

அவள் 
வாசமாகிக்கொண்டிருந்தாள்.

11.59

நான் 
இறந்துகொண்டிருந்தேன்.

அவள்
வெடிப்புகளில்
அடைத்த வார்த்தைகளை
தீண்டிக்கொண்டே
தேடிப் போனாள்.
ஒவ்வொரு துளியின்
ஆழத்திலும்
சிரிப்பின் மிச்சங்கள்.

00.00

நான்
இறந்துபோய்விட்டேன்.

அவள்
பேச்சுக்களை குறைத்து
அமிழ்ந்து போயிருந்தாள்.
பல்லிடை சிதறிய
மௌனத்தின் சத்தம்
எச்சிலில்
கரைந்துகொண்டிருந்தது.

00.01

நான்
உயிர்த்துக்கொண்டிருந்தேன்.

அவள்
அடிவானமாய்
இருண்டு போய்விட்டாள்.
கடித்தெறிந்த
மேகங்களில் மட்டும்
சிவப்பின் வாசம்.

00.02

நான்
மௌனித்திருந்தேன்.

அவள்
வாசமாகிவிட்டாள்.

.

வாசங்கள்
நீறும்வரை
குருதி
சிவப்பு

Views: 277