கடவுள் இறந்து விட்டார்

எழுத்தாளர் : ராஜா நர்மிமின்னஞ்சல் முகவரி: rajanarmi0@gmail.comBanner

ஒரு நாத்திகனின்
கைகளை இறுக்கமாக
பற்றி கொள்கிறேன்

அவர் வேதனை
மிகுந்ததோர் இரவை
பிரார்த்தனையில் 
கழித்து விட்டு

"ஆண்டவரே எனது
ஆண்டவரே என்னை
ஏன் கைவிட்டீர்?
என கதறிக்கொண்டு
சிலுவையை சுமந்ததாக
அறிந்த போதும்...,

இழப்பதற்கு எதுவுமில்லாத
போதும் கடவுள்
இருக்கிறான் என
கந்தல் போர்வையை
போர்த்திக்கொள்ளும்
அந்த முடவனை
பார்க்கும் போதும்,

மகளின் கற்பழிப்பு
கோலத்தை நிர்வாண
சடலமாக பார்க்க கிட்டிய
ஒவ்வொரு தந்தையையும்
பார்க்கும் போதெல்லாம்,

ஒரு நாத்திகனை
முன்னம் விட
பலமாக நெருங்கி
தொலைக்கிறேன்..
Views: 341