காகம்

எழுத்தாளர் : ஆதி பார்த்தீபன்மின்னஞ்சல் முகவரி: aathiabi13@gmail.comBanner

'டெற் கியூக்ஸ் இன்'காகம் கவிதைகளை 
படித்துகொண்டிருக்கும் 
ஒவ்வொரு மனிதனும் சொல்கிறான் 
அவன் ஒரு காகத்திலேயே 
எத்தனை அன்புகொண்ட மனிதன் - ஏன் 
சில்வியாவை நேசிக்காமல் விட்டான்
பின் பறந்து கொண்டிருக்கும் காகங்களை 
நான் தற்கொலை உணர்வுடனே பார்த்தேன் - காகங்களின் கூட்டில் 
எத்தனை 
குயில் முட்டைகளும் சிதைந்திருக்கலாம்

டெற் இன் வாழ்தல் 
சில்வியாவின் தற்கொலையில் மறைந்து போனது 
இவ்வாறாக யாருடைய இறப்பிலும் 
என் வாழ்தலை
மறைந்துக் கொள்ள பேராசை

*
தன்னைச் சில்வியா என்று சொல்லும் 
எத்தனை பெண்கள் 
பெருங்கூச்சல்
தொடர் புணர்தலின் பின் 
தற்கொலை செய்து கொள்வார்

*
டெற்றை நினைத்துப் பார்த்தீர்களா - அவனொரு தற்கொலைக் 
கவிதையின் வாழ்கின்ற வடிவம் 
* ஏன் இக் கவிதை காகம் பற்றியில்லை !!

அவளும் அப்படித்தான் 
நீ என்னை வெறுத்தால் சில்வியாவைப்போல 
உன் பிள்ளைகளின் முன் தற்கொலை 
செய்து கொள்வேனென்பாள் 
அதனால் தான் பல பெண்களை மனதிற்குள்ளும் 
அவளை வெளிப்படையாகவும் காதலிக்கிறேன்

இந்த வகையில் தான் - என்னால் 
டெற் நேசிக்கப்படுகிறான் 

நானொரு பெண்ணாயிருந்தால் - சில்வியாவாய் இருந்திருக்க மாட்டேன்

சாதல் அவளின் கலை 
கலை பெரும் கொண்டாட்டம் 
காகங்கள் இறந்து போகும் பெரு மரத்தை பார்த்தான் டெற் 
சில்வியா
ஒரு குருட்டுக் காகத்தைப்போல இறந்து 
போனாள்  

ஆக 

என்னிடம் டெற்றின் மேலொரு இரக்கமுண்டு 
அவன் ஒரு தற்கொலைக் கவிதையின் வாழ்கின்ற வடிவம் 
Views: 387