உவங்களை பற்றி இவங்களிடம் இருந்து.....!

எழுத்தாளர் : உவங்கள்மின்னஞ்சல் முகவரி: editor.uvangal@gmail.com



Banner

உவங்கள் இணைய சஞ்சிகை வாசககர்களே…. சென்ற மாத உவங்கள் இதழுக்கும்  நீங்கள் வழங்கிய ஆதரவு எமக்கு பெரும் மகிழ்வைத் தந்தது. உங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி. கடந்த மாத இதழ் தொடர்பான உங்கள் கருத்துக்கள் அனைத்தையும் நாம் மதிக்கிறோம். அவற்றைக் கருத்தில் கொண்டு எம்மால் முடிந்தளவிற்கு மாற்றங்களைச் செய்திருக்கிறோம்.  
இன்றைய இலக்கிய உலகில் வாசிப்பு தன்மையில் ஏற்பட்ட மாற்றம் இலக்கிய வடிவத்திலும் எழுத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தவேண்டிய தேவையாக காணப்படுகிறது. இதற்கு ஒரு பக்க பார்வையற்று எதையும் கேள்விக்கு உட்படுத்தி விசாரணை மேற்கொள்வது வளர்ச்சியை ஏற்படுத்த உதவும். இல்லையெனில் இலக்கியத் தேக்கம் என்ற நிலை ஏற்பட வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. அடுத்து விமர்சனம் ,விமர்சனத்தை ஏற்க அல்லது முன்வைக்க படைப்பை பன்முகப்பார்வையினூடாக முதலில் பார்க்க வேண்டும். பன்முகப் பார்வை எதையும் ஆழமாக உற்று நோக்குவதில் இருந்து ஆரம்பிக்கிறது.  ஆகவே இந்த தேக்க நிலையை உடைத்தெறிய வேண்டும் எனில் வெளிப்படையான காழ்ப்புணர்வற்ற உரையாடல் வெளி அவசியமாகிறது. அடுத்து இலக்கிய ஆளுமைகளை அறிமுகம் செய்தல் அது பக்கச்சார்பாகவோ அல்லது மிகைப்படுத்தலாகவோ அன்றி இருத்தல் அவ்வாளுமைமையை, அவரின் படைப்புகளை முழுமையாக தரிசிக்க உதவும். இச்செயற்பாட்டை இனிவரும் உவங்கள் இதழில் ஆரம்பிப்பது ஆரோக்கியமான செயற்பாடு என கருதுகின்றோம். அதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கிறோம் என்ற தகவலை மகிழ்வுடன் கூறிக் கொண்டு நான்காம் இதழாக வெளிவரும் இம்மாத உவங்கள் இதழும் வழமை போலவே பல ஆக்கங்களை தாங்கி வெளிவருகிறது. எழுத்துப்பிழைகளை சரிபார்த்து உதவியவர்களுக்கு நன்றி கூறுவதுடன் இம்மாத உவங்கள் முகப்பு பக்கத்தை வடிவமைத்து தந்த துவாரகன் பேரின்பநாதன் அவர்களுக்கும் முகப்புப் படத்தை வரைந்து தந்த வல்லை சுலக்சன் அவர்களுக்கும் நன்றியைக் கூறிக் கொள்கிறோம். மேலும் இச் சஞ்சிகை தொடர்பான கருத்துக்களை வாசகர்களிடம் இருந்து எதிர்பார்த்துக் கொண்டு அடுத்த வெளியீட்டில் உங்களை உவங்களின் வழி சந்திக்கிறோம்

Views: 190