மாயாவுடன் வாழ்தலின் பொருட்டு சிலுவையில் அறையப்பட்டவர்களின் குறிப்புகளின் நிகழ்காலத் தனிமை

எழுத்தாளர் : ஆதி பார்த்தீபன்மின்னஞ்சல் முகவரி: aathiabi13@gmail.comBanner

 
1.
உலகத்தின் ஏதாவது அனுபவ முடிச்சுக்களுடன் நீ வாழவேண்டும், என்றால் ஒரு ஐந்து நட்சத்திர கோப்பி சொப்பில் தேநீர் அருந்தி விடவேண்டுமென்ற நட்சத்திரக்கனவுகளுடன் தான் அவள் இருந்தாள். உலகத்தை ஒரு தடவையாவது சுத்திப்பார்க்கவேண்டும் என்று சொல்லும் அவளிடம் , நீ எப்போதாவது உண்மையாக காதலிக்கும் அந்திமகாலத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் மனிதர்களை உனது ஊரில் ஏதாவது சந்தர்ப்பத்தில் சந்தித்து உரையாடி  இருக்கின்றாயா, கண்டிருக்கின்றாயா என்றால் பதில் வராது அவள் அப்படிப்பட்டவள் இல்லைதான் என்று மனதுடன் சமரசம் செய்து கொண்டாலும், எனக்கென்னவோ அவள் வாழ்க்கையை முழுமையாக வாழவில்லை என்று தோன்றியது, அதை அவளிடம் சொன்னால் நீ என்னை அடிமைப்படுத்துகிறாய் என்று சொல்லி விடுவாள், இந்த நிலையிலிருந்து எப்படி மீண்டு வருவது என்று தெரியவில்லை எனக்கு, ஒரு புத்தகத்தை படித்து விட்டு அது எங்களை போலவே இருக்கின்றதே இந்த வாழ்க்கை முறை என்று அவள் முன் பிரமித்தாலும் இதை எல்லாம் நம்பும் முட்டாளா நீ என்று கேலி செய்வாள். ஆனால் வாழ்க்கை முழுவதையும் இழந்து எதோ ஒரு லட்சியத்துக்காக அடிமையாக இருக்கும் அவள் வெளியுலகத்துக்கு வந்தால் இந்த உலகத்தை அவள் எதிர் கொள்ள எத்தனை சமரசங்களை செய்துகொள்ள வேண்டியிருக்கும், ஊர் முனையில் ஒரு கடற்கரை இருந்தது, ஊருக்கு நடுவே ஒரு மிகப்பெரிய கோவில் இருந்தது. தேர்திருவிழாவுக்காக ஒரு நாளில் அங்கு கூட்டம் கூடும். ஊர் முழுவதும் நிறைந்து அந்த கோவிலை சுற்றியிருக்கும் அதில் ஒருத்தியாக அவள் இருப்பதை எண்ணி ஒரு கேள்வியை கேட்டேன், அதற்கு அவள் சொன்ன பதில் தேர்திருவிழாவில் சாமிக்கு அர்ச்சனை செய்தால் தான் அருள் கிடைக்கும், ஆக அந்த திருவிழாவின் போது நான் அந்த யாருமில்லா கடற்கரையை அடைந்திருப்பேன், ஆனால் எல்லோருடைய ரசனையும் ஒரே மாதி இருக்க முடியாதே என்று ஒரு முறை ஒரு தத்துவவாதி எழுதிய புத்தகத்தில் இருந்ததை படித்தேன், அதனால் என்ன ஒரு தேர்திருவிழாவில் எனது உடலில் ஏதோ ஒரு இடத்தில ஏற்படும் சுனைப்பை இன்னொரு உடலில் தேய்த்து அதை தீர்த்துக்கொள்ள நான் விரும்பியதில்லை
 
2.
உனக்கு கடற்கரை பிடித்ததைப்போல எனக்கு திருவிழா பிடித்திருக்கிறது என்று ஆரம்பித்த கதையை நான் திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டிருந்தேன், ஆனால் எனக்கு பிடித்த கடற்கரை எப்படிப்பட்டது உனக்கு தெரியுமா, அந்த கடலில் யாருமே குளிக்காத ஒரு நாளில் மத்தியான நேரத்தில் அதன் கரையில் கட்டப்படிருக்கும் தங்கும் நிழல்குடையின் கீழ் அமர்ந்திருந்தேன் கடலுக்கு எதிர்பக்கமாக தெருவை வெறித்தபடி யாருமே இல்லாத தெரு, பின் முதுகை உதைப்பதைப்போன்ற கடலின் சத்தம். தூரத்து மூலையில டிங்...டிங்....டிங் மணியின் சத்தம் அது மூலையை தாண்டி இப்போது எனது கண்ணுக்கே காட்சிப்படுகிறது, ஒரு ஐஸ்பழ வண்டி 'நிரோஷா ஐஸ்பழம்' பாதையை தாண்டி கடலின் எதிர்ப்புறம் மணல்திட்டுக்கள் காறையான  பழைய தென்னை மரங்கள், நீளமூஞ்சி வண்டின் செயலால் சூம்பிப் போய் மண்ணிறமும் செம்மஞ்சலும் கலந்து காட்சியளிக்கும் இளநீர், அதற்க்கு முற்றும் மாறாக குலை குலையாய் தொங்கும் பனம்பழங்களை காவிநிற்கும் பனை மரங்கள், அதையும் தாண்டி மணல் குவியலால்  பாதி மறைக்க பட்டு தூரத்தில் தெரியும் படலை போட்ட வீடுகள், இப்போது முன்னாலிருந்த படலை திறக்கப்படுகிறது ஒரு சிறுவனும் சிறுமியும் சிறுவன் பாடசாலை காற்சடை போட்டிருக்கிறான் மேற்சட்டை இல்லை, அவனதும் அவளதும் தோற்றம் ஏதோ ஒரு ஆபிரிக்க நாட்டை ஞாபகப்படுத்திவிடும், சிறுவனின் காற்சட்டையின் முழுப்பகுதியும் மூடப்படாமல் அந்த இடுப்பு பட்டி திறந்திருந்தது, அவனது கையை பிடித்து கொண்டிருக்கும் சிறுமி, நிச்சயமாக அவனது தங்கை தான் என்று பிறகு உணர்ந்து கொண்டேன், பழுப்பு மஞ்சள் பாதி கிழிந்த சட்டையில் மண்ணிறப்பூக்கள், ஐஸ்பழ வண்டியின் சத்தம் கேட்டு மணல்திட்டுக்களை கடந்து வெயில் கால்களைச் சுடச்சுட ஓடி வருகின்றான். ஐஸ்பழக் காரனிடம் அந்த சில்லறையான் பத்து ஷரூபாய் நாணயங்களை கொடுத்து ஒரு ஐஸ்பழம் வாங்குறான். அண்ணா ஓடி வா அண்ணா' சிறுமி கூச்சலிட கைகளில் கரைந்து வழிந்த அந்த ஐஸ்பழ நீரை நாக்கினால் நக்கியபடியே சிறுமியை அடைகிறான், பின் இருவரும் கடலை பார்த்தவாறே மாறி மாறி அந்த ஐஸ்பழத்தை உறிஞ்சிக்கொண்டிருக்கின்றனர், இதற்கிடையில் அந்த குறுகியநேரத்தில் அந்த கடலின் சத்தம் எங்கே இருந்தது என்று உணராமல் இருந்தேன். பொதுவாக  எனக்கு இப்படியான  கடற்கரையைப் பிடிக்கும், எனக்கு முன் மௌனமாக இருக்கின்ற கடல் அல்லது கடலுக்கு முன் மௌனமாக இருக்கின்ற நான்.  
 
3.
அதீத கற்பனை  உள்ள மனிதர்கள் இந்த உலகத்தில் இல்லாவிட்டால்  இந்த உலகம் அன்பு என்ற ஒரு வசனத்தின் தன்மையிழந்திருக்கும் என்றார் நாரதர்,  நாரதர் எனது நிகழ்கால நண்பர், ஆனால் உனது கற்பனைகள் வித்தியாசமானவை, அவர் சொல்வதில் எதோ நியாயம் இருந்துகொண்டிருந்தது, எனது கற்பனை எப்படிப்பட்டது என்றால் ஒருவன் எனக்கு தன்னை அறிமுகம் செய்துகொள்ள முயற்சிக்கும் போதே அவனிடம் கையை நீட்டலாமா அல்லது வணக்கம் சொல்லலாமா அல்லது கன்னத்தை ஒருமுறை உரசி ஆங்கில முறைப்படி ஒரு அணைப்பு, எதை செய்யலாம் என்று நினைக்கும் போதே கட்டியணைக்கும் போது அவன் கத்தியால் எடுத்து எனது வயிற்றுப்பகுதியில் துளையிட்டு பார்க்க முயற்சித்தால் அல்லது உச்சந்தலையில் ஒரு சூலாயுததால் இறுக்கி அதன் ஒருமுனை மாத்திரம் எனது குறியை பாதியாக பிளந்து கொண்டு வந்தால் என்று நினைத்துக் கொண்டே கைவிரல்களை முஷ்டியாக பொத்தி பற்களை இறுக்கமாக கடித்து தோளின் பகுதிகள் ஒருமுறை குலுங்கிவிழ உடம்பு சிலிர்க்க, முக்கியமாக தூங்கப்போகும் போது இந்த கூரையே எனக்கு மேல் விழுந்து நான் ஒரு காய்ந்த ரொட்டியில் கிசான் ஜாம் பூசியதைப்போல மறுநாள் மீட்க வருபவர்களின் கையில் சிக்கினால் என்று நினைத்தபடியே படுத்து இருப்பேன், அதனால் தான் தூங்கப்போக முதல் காற்சட்டை அணித்திருக்கின்றேனா என்றும் சரத்தின் முடிச்சை இறுக்கமாக போட்டுள்ளேனா என்றும் ஒருதடவைக்கு பலதடவை பரிசோதித்துப்பார்த்துக்கொள்ளுவேன், சப்பளித்த குறியையும் பிட்டங்களையும் பார்க்க நேர்ந்தவர்கள் துரதிஷ்டசாலிகள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன், அதனாலேயே இந்த முன்னேற்பாடு. அது எனது சின்னவயதிலிருந்தே பழக்கப்பட்டு போன ஒன்று, 22 வருடங்களில் பத்து வருடங்களுக்கு மேலாக தனியாக இருக்கிறேன், அதனாலும் இருக்கலாம் இப்படியான அதீத கற்பனைகள்.  இப்போது கூட நான் தூங்கிக்கொண்டிருக்கும் போது கதவு தட்டப்படும் சத்தம் கேட்கிறது, சுமார் பன்னிரண்டு மணியை தாண்டியிருக்கும் மழையின் சத்தமும் ஈசல்களின் இரைச்சலும் கேக்கின்றது, மண்புழு காதலிப்பதை நள்ளிரவில் தான் கேக்க முடியுமாம் அம்மம்மா சொல்லுவா, அதற்காக ஒரு பெரிய கதையொன்றைக்கூட அடிக்கடி சொல்லுவா, ஆனால் நான் சொல்லிக்கொண்டிருப்பது  எல்லாப் பேய்க்கதைகளிலும் வருவதைப்போல நள்ளிரவு பன்னிரண்டு மணி அடை மழை, கண்டிப்பாக கதைவை திறக்கும் போது ஒரு பெண் நின்றால் அது நிச்சயமாக நேற்று பேப்பரில் படித்த கமலாவின் ஆவியாக இருந்துவிடக்கூடும்
 
அவ்வாறு நடக்கவில்லையா என்று நீங்கள் நாளைக்கு என்னிடம் கேட்கலாம்
 
அதற்கு முதல் நான் உங்களுக்கு ஒன்று சொல்லியாகவேண்டும், எனது வீட்டின் உரிமையாளர் ஒரு சில மாடுகளை வளர்க்கிறார், பசுக்களும் உண்டு, அது ஒரு சிறிய மாட்டுப்பண்ணை என்று சொல்லலாம், முக்கியமாக மாடுகளின் இனப்பெருக்கத்தை அவர்கள் கொண்டாடினார்கள் என்றதுக்கு அவர்களின் காளை வளர்ப்பு முறையை உதாரணமாகச் சொல்லலாம், நான்கு காளைகள் உண்டு, அவைகளை வெளியே மேய விடுவதில்லை, நான்கிற்கும் தனித்தனியான குழிகள் நிலத்தில் தோண்டப்பட்டிருந்தது , அவற்றில் தான் அவைகளை வளர்க்கிறார்கள். அதன் தலைப்பகுதியிலிருந்து ஒரு கையளவு தூரத்தில் அவைக்கான, பிரத்தியேக புல் கடடப்பட்டிருந்தது , அவைகள் எட்டி எட்டி பாய்ந்து அவற்றை கவ்விக்கொண்டிருந்தன, நியூசிலாந்திலிருந்து  கப்பல் மூலம் வரவழைக்கப்பட்ட புல் இனங்களாம். அன்றும்  அவ்வாறாகத்தான் நான் வெளியே புறப்பட்டுச்சென்றபோது வழமையாக காளைகள் முயற்சித்து அந்த புல்லுக்கடடை கொரித்துக்கொண்டிருந்தன, நான்கு பசுக்களும் கொட்டிலில் அவைகளுக்காக கடடப்பட்டிருந்த நீர் தொட்டியில் நீரை உறிஞ்சிக்கொண்டிருந்தன, தாத்தாவை நினைத்துக்கொண்டேன் எனது தாத்தா இவ்வாறாக தான் திரவ ஆகாரங்களை உறிஞ்சுவார், ஜீன்ஸின் பின் பக்கம் அழுத்தம் தாங்காமல் கிழிந்தமாதி ஒரு சத்தம் வரும். அடுத்த பக்கத்தில் வீட்டு உரிமையாளரின் மகன் ஆறுவயதை தாண்டியவன் அங்கிருந்த கே3 என்று இலக்கமிடப்பட்டு குழிக்குள் முரண்டுகொண்டிருந்த காளைக்கு தனது பீசாவில் ஒரு துண்டை அளித்துக்கொண்டிருந்தான் " சாப்பிடு சாப்பிடு" ஒரு மனிதருக்குரிய வாஞ்சை அது, அந்த காளையை ஒரு குழந்தையைப்போல நேசித்தான், நான் பார்த்துக்கொண்டே நின்றேன்.. பீசா..  பையன்... பீசா.. பையன் பையன்.. , இப்போது பையன் என்னைப்பார்த்து கொண்டிருந்தான், கண்களால் உனக்கும் வேணுமா என்று கேட்டான், என்னை அவன் ஒரு காளை மாட்டைப்பார்ப்பதைப்போல பார்த்தான், அம்மா இந்த மாடு சாப்பிடுது எப்படி சாப்பிடுது பாருங்கோ, "தம்பி வா குப்பைக்க நிக்காத" என்ற குரல் வந்த திசைக்கு கண்கள் உருண்டு திரும்ப முதலில், வெளுத்த எருதின் முதுகின் திமிலை போல  இருந்தது சமாந்தரமான இடைவெளியில், தெளிவாக அவதானித்ததும் ,அது அவளது கிளிவேஜ், நூறுவீத பெண் அடையாளம். இறப்பர்போல வாயை நீட்டி சிரித்தேன் வெளிக்கிட்டாச்சா. என்றுவிட்டு பதிலுக்கு காத்திருக்காமல்  சாப்பிட்டாச்சா என்றாள், ஓம் என்ற பொய்யை சொல்லும் போதே, நெய் தோசையின் வாசம் மூக்குக்குள் நுழைந்து சென்றது, ஹ்ம்ம் என்றேன் அங்கலாய்ப்புடன், சரி என்றாள் சிரித்தபடி. வீட்டில நெய் ரொட்டி சாப்பிடலாமே ஒன்றுநான் நெய் தோசை என்று நினைத்தேன் செப்புக்குடத்துக்குள் விழுந்த வளையல்களை போல கலகலத்துச் சிரித்தாள். மரியாதை நிமித்தமாக ஒன்றை எடுத்துக்கொண்டேன்,  தண்ணீர்" முடிந்தது எப்படி என்றாள். உலகத்திலுள்ள அனைத்து பசுக்களின்  மடிகளையும் பிழிந்தெடுத்து ஊறிய நெய் போல் இருந்தது என்றேன். கொஞ்ச நேரம் அதாவது இரண்டு சுட்டு விரல் ஒலியெழுப்பும் நேரம் வரை அமைதியாக இருந்தவள், சுதாகரித்துக்கொண்டு சிரித்தாள். வித்தியாசமாக கதைக்கிறாய் என்பதைப்போல் இருந்தது அவளின் பார்வை, கோப்பையை யார் எடுப்பது என்பதில் சிறிது நேரம் கலவரம் பிறகு அவளே எடுத்துக்கொண்டாள்

இரண்டுகிழமைகளின் பின்  பசுக்களை சினைக்கொள்ள வைக்கும் சம்பவம் இடம்பெற்றது, மாலை அலுவலகம் முடித்து திரும்பிக்கொண்டிருந்தேன், பலர் வீட்டில் குவிந்திருந்தார்கள், மஞ்சள் மின் குமிழ்களால் ஒளியேற்றப்பட்டிருந்த பசுக்களின் பகுதி, ஒளியேற்றிய கிரிக்கெட் மைதானம் போல இருந்தது, அந்த ஒளியிருந்த  வடடமான பகுதியின் நடுப்பகுதியில் மரக்குற்றியால் இடப்பட்ட ஒரு கம்பத்தின் நடுவில் பி1 என்று பெயர் பொருத்தப்பட்டிருந்த பசு கட்டி வைக்கப்பட்டிருந்தது, இப்போது கையில் பிடித்திருந்த கயிற்றை இழுத்தவாறு வீட்டு உரிமையாளர் வந்து கொண்டிருந்தான், மறுமுனையில் கே1 என்று  பெயரிடப்பட்ட காளை மெல்ல நடந்து வந்துகொண்டிருந்தது, அதன் கண்கள் கட்டப்பட்டிருந்தன. கறுத்த துணியால் இறுக்கமாக. கொஞ்சம் கொஞ்சமாக மஞ்சள் ஒளியை பிரகாசம் குறைத்து மங்கவைத்தார்கள், மஞ்சள் ஒளி நித்திரைகொள்ள வைக்கும் நிறத்தில் மங்கியிருந்தது. திடீரென உரிமையாளன் எங்களை நோக்கி ஒரு மந்திரப்புன்னகை செய்தான். கைகளை மடித்து வெற்றிக்குறியை காட்டினான், இவ்வளவு  பெரிய வீண் செயற்பாடுகளின் பின் அந்த கறுத்த  துணியை மெல்ல அவிழ்த்துவிட்டு ஓடிவந்து எங்கள் கூட்டத்தில் இணைந்துகொண்டான். காளை மெல்ல நெருங்கி பசுவின் பிட்டங்களை முகர்ந்து ஆரம்பித்தது. அது தொடர்ச்சியாக பசுவை பந்தாடிக்கொண்டிருந்தது, இருட்டில் நின்ற மக்கள் கூச்சலிட்டார்கள். அப்படிதான் நன்றாக செய்கிறது" ஒரு சிறுவன் பெரிதாக கத்தினான் அப்படியே பசுவை வானம் வரை தூக்கு காளையே என்று, பாவம் காளை எவ்வளவு இடித்தும் பசுவை கீழே விழுத்த முடியவில்லை என்று அங்கலாய்த்தாள் ஒரு சிறுமி, வெறும் தலைகளையும் குரல்களையும் வாசத்தையும் மாத்திரமே அனுபவிக்க முடிந்த அந்த இருளில், அவர்களின் கூச்சல் காளையை உக்கிரமாக மாற்றியது, பசுவின் அலறல் மக்களின் அலறலுக்குள் மங்கியிருந்தது. இறுதியாக காளை மயங்கிச்சரிந்தது, கிட்டதட்ட பலமணி நேரங்கள். இவ்வாறாக நான்கு ஜோடிகளை ஒரு இரவில் சேர்த்தான் அந்த உரிமையாளர், இறுதி ஜோடியை சேர்க்கும்போது கிட்டதட்ட அதிகாலை ஆகியிருந்தது, சிலர் நித்திரை கொண்டிருந்தார்கள் வைக்கோல் கற்றையை தலையனை போல உருட்டி, உரிமையாளனும் அசதியாக காணப்படான். எந்தக்காளை இதில் வலிமையானதென்று நினைக்கிறாய் எண்டு ஒரு குரல் எனது செவியில் விழ, நான் மூன்றாவது என்றேன், அந்த ஒரு காளையின் சேர்க்கையில் இருந்த பசுவின் அலறல் தான் மனித சத்தங்களை விட அதிகமாக கேட்டது என்றேன், எனக்கும், நானும் அப்படிதான் நினைக்கிறேன் என்றது ,அது ஒரு பெண்ணின் குரல் மட்டுமில்லாமல் அவளின் உடலில் பசு நெய் மணத்தது.

இன்றையதினம் வீடுதிரும்ப இரவாகியிருந்தது , மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது வீட்டு வாசலுக்கு வந்து சேர்ந்தேன், நேற்றைய இரவில் அசுரத்தனமான வேட்டை நடந்த தனிப்பெரும் காடு இருளின் கதகதப்பில் உறங்கிக்கொண்டிருப்பதாக பட்டது, அவர்கள் வீட்டில் ஒரு சிமிலி லாம்பு திறந்திருந்த கதவுகளுக்கிடையே மையமாக வைக்கப்பட்டிருந்தது, சிறுவனின் சத்தத்தையும் காணக்கிடைக்கவில்லை, அந்த இடத்தை அடைந்த போது இருளில் கால்புதைந்து கொண்டது, கோமயமும் மதன நீரும் கலந்ததால் வந்த சகதி, பிரயத்தனப்பட்டு கால்களை வைத்துக்கொண்டிருந்தேன் சப்பாத்தில் அது ஒரு படைபோல ஒட்டியிருக்கும் என்பது நிச்சயமாக்கப்பட்டது. அவளை ஒரு தடவை அந்த விளக்கின் முன் பகுதியில் மூடப்படும் திரைசீலை போல அவளது ஆடை நிற்க காணமுடிந்தது, விளக்கின் முன் பகுதியில் அவள் நின்றதால் விளக்கின் ஒளி மங்கிக்கொள்ள, அவளது நிழல் மட்டும் எனது காலடி வரை விழுந்தது, என்னை பார்த்துக் கொண்டிருப்பதைப்போல தோன்றியதால் கைகளை அசைத்து எனது இருப்பை தெரியப்படுத்தினேன், ஆனாலும் பதில் கையசைப்பு வராததால் வேகமாக எனது வீட்டை அடைந்தேன். அறையின் சோகத்தை தீர்க்கும் பொருட்டு மெழுகுதிரியை கொளுத்திவிட்டு  அமர்ந்துகொண்டேன், எப்போது தூங்கிப்போனேன் எண்டு தெரியாது, உடையையோ சகதியில் புதைந்த சப்பாத்துக்களையோ கழட்டுவதற்கு கூட அவகாசம் தர முடியாத அந்த தூக்கத்தில் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. இது தான் இப்போது நிகழ்ந்துகொண்டிருக்கும் சம்பவம்,வெளியே மழையின் சத்தம், தடுமாறி அணிந்திருந்த மெழுகுதிரியின் இறுதிப்பகுதியை பற்றவைத்துக்கொண்டிருந்தேன்,பேயாக இருக்கும் பட்சத்தில் அதை எதிர்கொள்வதற்கான வழிமுறையாக அந்த மெழுகுவர்த்தியின் இறுதிக்காலத்தை எதிர்நோக்கிய ஒளியும், ஒரு எலுமிச்சம்பழமும், வாந்தி வரும் குணத்திற்காக கைகாவலாக வாங்கி வைத்திருந்த பாதி அழுகிய நிலையிலிருந்த எலுமிச்சம்பழம், பாதுகாப்பு உபகரணங்கள் கூர்மையை விட மழுங்கிய கத்தி கூட நம்பிக்கையிருந்தால் காப்பாற்றும் கருவியாக மாறும் என்று எத்தனையோ ஞானிகள் சொல்லியிருக்கிறார்கள் இல்லையா, பிறகு நடந்து சென்று கதவைத் திறந்தேன், மழையே இல்லை ஒரே நேரத்தில் இரண்டு மாடுகள் சிறுநீர் கழித்திருக்க வேண்டும். இப்போதும் ஒன்று, தூக்கத்திலிருந்து விழித்திருக்கும் போது இந்த மாதிரியான சத்தப்பிரமை வழமையானது தான், பிறகு எனது வழியைத் தள்ளியபடி அவள் நுழைந்தாள். நெய்யின் வாசம் பலமாக வீசியது,

ஒருவரது வாசத்தை அவரது முதலாவது சந்திப்பிலிருந்து பொறுக்கியெடுத்துக்கொள்ளுவதும் எனது அதீத கற்பனை சார்ந்த ஒன்றாக இருக்கக்கூடும். நாரதரை நினைக்கும் போது பலநாட்கள் தோய்க்கப்படாத காற்சட்டை பொக்கற்றுக்குள் இருந்து எடுத்துக்கொடுக்கும் சில்லறைகள் வாசம் ஞாபகம் வரும், அம்மாவை ஞாபகப்படுத்துவது என்னை முதல் முதலாக குளிக்கவைத்த போது பயன்படுத்திய பேபி சோப்பின் நுரைவாசம். இவ்வாறாக தான் இந்த நெய்வாசம் நாசிக்குள் நுழைய அவள் எனது சகதியடைந்திருந்த படுக்கையை நோக்கி சென்று கொண்டிருந்தாள், வேகமாகவே சென்றேன். அதே உடல் காளைமாட்டின்  திமில் போல நின்ற அந்த பகுதி.  நானும் வேகமாகவே சென்றேன், உடல் பரபரத்தது , அருகில் வந்து அவள் அமர்ந்துகொண்டு  பட்ட மரத்தை விரல் நகங்களால் விராண்டுவதைப்போல எனது கண்ணில் கீழ்ப்பகுதியில் இரண்டு கீறல்களை வைத்தாள், பிறகு மெழுகு வர்த்தியின் அணைந்த பின் எழும் ஒரு வித வாசம் நாசிக்குள் புகுந்துகொண்டது.  பிறகு உடல்களை உடல்களால் களைந்துகொண்டிருந்தோம், முதல் ஆடைகளை பிறகு தசைகளை பிறகு எலும்புகளை பிறகு உள்ளிருக்கும் அங்கங்களை கடைசியில் எப்படி இருக்கின்றது என்று கேடடாள். தொடர்ச்சியான மழைக்கு பிறகு வரும் முதலாவது வெயில் நாளில் குளக்கரையை அண்மித்திருக்கும் மரத்தின் கீழிருந்த இரண்டு பாசிபடர்ந்த பாறைகளுக்கிடையில் கைகளை செலுத்தினேன், அதே கதகதப்பு, அவளது மார்புக்குள் இருந்தது, அக்குள் பகுதிக்குள் ஆர்வமிகுதியால் தேங்காயாக முதலே இறக்கப்படட வழுக்கல் பதமான முற்றாத தேங்காயின் வாசம், இடைப்பகுதி தோசைக்கல்லில் இட்ட குளிர்ச்சியான முட்டைத்திரவம், பிறகு அந்த எல்லையில்லாத இன்பத்தை என்ன சொல்வாய் என்றாள். காலைச்சூரிய உதயத்தின் போது கடற்கரையில் நின்று சூரியனைப்பார்க்கிறேன் அந்த சூரியனை v வடிவமாக பிளந்துவைத்ததைப்போல அதன் நேராக ஒரு பறவை பறந்து கொண்டிருந்தது அதன் சிறகடிப்பு உனது அந்தரங்கம்,
மிகவும் கரகரப்பான மங்கிய குரலில் அதை தான் pussy என்று சொல்வார்கள் என்றாள்.
கண்களைத்திறந்த போது காலை எட்டுமணிக்கு மேலே இருக்கும், எல்லாம் வழமைபோல இருந்த இடத்திலேயே இருந்தது, எதிலும் மாற்றம் ஏற்பட்டிருக்கவில்லை, கண்களை சரியாக கசக்கியபடியே மங்கலாக தூரத்தில் இருந்த துணிகளை கோர்த்துவைக்கும் கொழுவியில் ஒரு பான்ரி தொங்கிக்கொண்டிருந்தத்தைப் பார்த்தேன் . அருகில் சென்றேன் அவள் தான் மறந்து அவசரத்தில் அணியாமல் சென்றிருக்க வேண்டும். கற்பனை எல்லாம் இல்லை, எல்லாமே உண்மையாக நடந்திருக்கிறது. அதை அனுபவிக்க முடியாத நிலையில் அனுபவித்திருக்கின்றேனே என்று வாயை சுளித்துக்கொண்டேன், இன்று போகின்ற நேரத்தில் ஒரு தடவையாவது இன்னொரு தடவை என்பதை அரசல் புரசலாக கேட்டுவிடுவோமா என்றவாறே நடந்து கொண்டு அது தொங்கிக்கொண்டிருந்த கொடிக்கு மிக மிக அருகில் வந்துவிட்டேன்.எனது கண்ணுக்குள் விழுந்த சிவப்புநிற பான்ரி நேற்று நான்  அவசரமாக சாப்பிட்டு அடைந்து வைத்த சிவப்புநிற பொலுத்தீன் பையாக மாறியிருந்தது.
4.
 
மறுநாள் காலை அவளை பார்ப்பதற்கே கொஞ்சம் கூச்சமாக இருந்தது, இரவு முழுவதும் அவளை கனவில் சீ என்றபடியே இருந்தது மனம், அவளுக்கும் புணர்தலின் அசதி இருக்குமா அல்லது அவள் வழமை போல இருப்பாளா என்றவாறு வீட்டை பார்த்துக்கொண்டிருந்தேன், தலை வலி முற்று முழுதாக குணமாகி இருக்கவில்லை, கடற்கரைக்கு செல்லலாம், நாரதரைப் பார்க்கலாம், பதினொன்றரைக்கு எல்லாம் நாரதர் வந்து விடுவார், அவர் மத்தியான நேரங்களில் பிச்சை எடுப்பதில்லை, புதன்கிழமை மாத்திரம் அந்த பெண்கள் கல்லூரிக்கு முன் பிச்சை எடுக்கிறார், அன்று மாத்திரம் அவருக்கு இரண்டு விதமான அதிஷ்டம் வேலை செய்யும் ஒன்று பதினான்கிலிருந்து பதினெட்டு வயது வரை இருக்கும் பெண்களுக்கு இரக்கம் அதிகம் என்றுவார், தலா இருப்பது ரூபா வீதமாவது ஒரு ஐம்பது பேரிடம் சம்பாதித்து விடலாம். இரண்டாவது சிறிய கடியெறும்புகள் கடித்ததால் சிவப்பு யம்புக்காயை போல சிவந்து தடித்திருக்கும் அந்த குறியை அழுக்கு வேட்டியினால் மெல்ல விலக்கி அந்த யௌவனப் பெண்களின் பார்வைக்கு மெல்ல காட்சிப்படுத்துவாராம். அதை அவர்களே பலமுறை யம்புக்காயை போல இருக்கின்றது என்று சொல்லிச் சிரித்துச் செல்வதை கேட்டு மனசு அந்தரத்தில் பறக்கும் என்றிருக்கிறார். இது வரை ஒரு தடவை கூட எனக்கு காட்டவில்லை என்பது நான் அதன் கணபரிமாணங்களை அறிந்துகொண்டு அது யம்புக்காயை போல இருக்கின்றதா என சொல்வதற்கு சிரமமாக இருந்தது,  இன்று ஆயிரம் ரூபா சம்பாதித்திருந்தால் அவரே தேநீருக்கான செலவை  ஏற்றுக்கொண்டு விடுவார், அவரின் நம்பிக்கைக்குரிய நண்பனாக கடந்த சில காலங்களாக நான் இருந்துவந்ததே அதற்கு காரணம், அவரது உடல் உறுப்புகள் எதுவும் பழுதடைந்து இருக்கவில்லை உண்மையை சொல்லப்போனால் என்னைவிட ஆரோக்கியமானவராக இருந்தார். கழுவப்படாமல் இருந்த தாடி மாத்திரம் தான் பசை போல குழைந்து நெஞ்சுப்பகுதியில் விழுந்தது, நாப்பது வயதை தாண்டியிருந்தார். அடிக்கடி கடற்கரைக்கு வரும் போது சந்தித்துக்கொண்டோம், உலக நடப்புகளைப்பற்றி பேசிக்கொண்டோம். தனது விந்தையே வெட்டபட்ட பாணில பூசி உண்ணும் நணபனைப்பற்றி நான் சொன்னால் பதிலுக்கு ஒரு ரூபா நாணயம் அளவு முலைக்காம்பையுடைய அவரது சக பிச்சைக்காரியைப்பற்றி சொல்லுவார், அவள் ஒரு பைத்தியக்காரியும் கூட  எனக்கு தெரிந்த வரை சுவாரசியமான ஒரு கதை அவளது வாழ்க்கை பற்றியது தான், வயதான கணவனுடன் திருமணம் நடந்து ஒரு பெண்பிள்ளை பிறந்தவுடன் கணவன் இறந்து போய் இருக்கின்றான், அதன் பின் பட்டினியாக இருந்த குழந்தையை  ஒரு நல்ல நாள் பார்த்து கழுத்தை இறுக்கியவாறே பால்கொடுத்து அது புரையேறி இறந்துபோக வைத்திருக்கிறாள், குழந்தையின் பட்டினி வெறி தான் அவளின் காம்புகளை ஒரு ரூபாவளவு பெரிதாகியிருக்கின்றது என்பதை யூகம் செய்து கொண்டேன். இப்படி கொலைகாரியாக இருந்த அவள் ஒரு முறை ஒரு கழிவு வாய்க்காலுக்குள் அவசரமாக அறுக்கப்பட்ட தொப்புள் கொடியுடன் தூக்கி எறியப்பட குழந்தையின் பிணத்தை தன் மார்போடு அணைத்தபடி ஒரு இரவு மற்றும் ஒரு பகல் அந்த வீதியில் நின்றாளாம், மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் அந்த குழந்தையின் பிணத்தை பிரித்தார்கள், அவளிடம் இருந்து பிரித்தார்கள். இறுதிவரை அவள் அந்த தொப்புள் கோடியை பற்றிக்கொண்டு கூச்சலிடடாளாம், அதை விட கொடுமை என்னவென்றால்  அதை பிரித்தெடுக்க இரண்டு நாட்கள் சென்றிருந்தது ஏனென்றால் அமைச்சரவையில் அதை எவ்வாறு பிரித்து எடுப்பது போன்ற திட்டங்கள் இரண்டு நாட்கள் மேற்கொள்ளப்பட்டனவாம். எனக்கு சடடென்று ஒரு கரிய பெண் ஞாபகம் வந்தாள், அழுக்கடைந்த துணியோ கையில் பிணமான நிலையில் ஒரு சிறிய உடல், அதன் தொப்புள் கோடி அவளது தொடைப்பகுதி வரை நீளமானதாக இருக்கிறது , அபத்தம் அவள் பழுப்பு நிற தோலை உடைய பெண் என்றார் நாரதர், எனது அதீத கற்பனை அந்த பிச்சைக்காரியையையும் விட்டு வைக்கவில்லை. நாரதர் சொல்லும் பாடசாலை பெண்களை இப்படி தான் கற்பனைபண்ணிக் கொள்ளுவேன்,  அப்சரஸ்கள் அந்த பாடசாலை வீதி ஒரு தேவலோகச்சாலை, இதோ காற்றில் பறந்து விடும் என்ற நிலையில் வெண்மையான மெல்லிய ஆடை, சீவப்பட பென்சிலின் முன்பக்கத்தைப்போன்ற முலைகள். எப்போதும் அதிகாலை நேர சூரியனின் வண்ணங்களுடன் அமைந்த காலநிலை  ஆனால் உண்மையில் அப்படி இருக்காது அதீத கற்பனையில் கடலின் கூச்சலும் மறைந்துவிடும். அப்படி இருந்தது எனது உலகம்மணி பதினொன்றை அண்மித்த போது நாரதர் வந்து கொண்டிருந்தார். முன்னால் போடப்பட்டிருந்த தட்டிக்கடையில் நீண்டநேரம் நின்றுகொண்டிருப்பதை பார்த்தபடி இருந்தேன், அது ஒரு சிறிய சாப்பாட்டுக்கடை போதிய வசதிகள் இருக்காது. கிடுகால் பின்னி மறைக்கப்பட்டிருக்கும். அங்கே ஒரே ஒருவன் இருக்கிறான் தேநீரை குறிப்பிட தூரம் வரை மேலே கையை கொண்டு சென்று ஆத்தியபடி இருப்பான் சிவபெருமான் ஒளிப்பிழம்பாக மாறிய கதை ஞாபகம் வரும் சூடாக இருக்கும் தேநீரின் வடிவம் எனக்கு அப்படி தான் காட்சியளிக்கும், இப்போதும் இரண்டு தேநீர் தயாராகிக்கொண்டிருந்தது.. கடைக்காரனுக்கு தேநீர் போடுவதைத்தவிர ஈக்கள் விரட்டுவது தான் பிரதான தொழில், ஓய்வு நேரத்தில் மாத்திரம் கொஞ்சம் தேநீர் போடுகின்றான். நாரதர் வந்து அருகில் அமர்ந்து கொண்டார், டே மச்சான் சொல்லடா என்று கதைத்து கொண்டாடுமளவு நட்பு இல்லை ஒரு மரியாதை நிமிர்த்தமான நட்பு, சந்திக்கும் பொது பேச்சை யார் முதலில் தொடங்குவது என்பதில் இருவருக்கும் கொஞ்சம் கூச்சம் இருக்கும், என்ன தேத்தண்ணி ஊத்துறான் பச்சைத்தண்ணி என்று நாரதர் ஆரம்பிக்க வேண்டும், இல்லை சீனி கூட என்று நான் ஆரம்பிக்க வேண்டும் இவ்வாறு தான் உரையாடல்கள் ஆரம்பிக்கும், தேநீரை மத்தியஸ்தம் பண்ணி, பிறகு நேற்றைய நாள் பற்றி. நேற்றைய பொழுதுகளில் எங்களுக்குள் நடந்த சுவாரசியமான சம்பவங்களைப்பற்றி பரஸ்பரம் பரிமாறிக்கொள்வோம், குடும்பத்தை பற்றி நான் கதைத்து கிடையாது, எனக்கு ஒரு குடும்பம் இருந்தது என்ற வரலாற்று ஆவணத்தை தூசி தட்டி ஆரம்பிக்கும் எந்த கதைகளும்இருக்கும் கொஞ்ச நெஞ்ச சந்தோசத்தையும் குழப்பிவிடும் என்பதால் கூடுதலாக எங்கள் வாழ்க்கையில் இருக்கும் பெண்களைப்பற்றியே உரையாடுவோம். நாரதருக்கு முப்பது வயதாகி இருக்கும் ஒரு காதலி இருக்கின்றாள். என் பிச்சைக்காரர்களுக்கு காதலி இருக்கக்கூடாதா? இருக்கலாம் நீங்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள் உங்களுக்கு எல்லாமே அருவருப்பும் இன்சல்ட் செய்வதும் , ஏனென்றால் நீங்கள் வலதுசாரிய சிந்தனையுள்ள புத்திஜீவிகள்  பின்நவீனத்துவம் பேசும் கம்மனாட்டிகள் உங்களுக்கு தெரிந்ததெல்லாம் ஏசி ரூமில் உங்கள் சமபாலினரை  புரட்டி எடுப்பது அது தான் உங்கள் தார்மீக கடமை. எனக்கு அந்த காதலை ரசிக்கக்கூடியதாக இருந்தது. ஏனென்றால் அவர்கள் காதல் வெளிப்படும் தருணம் மிகக்குறுகியது, அதாவது அவள் ஆடை மாற்றும் போது , அவள் கிழமையில் மூன்று தடவைகள் ஆடை மாற்றிக்கொள்வாள், நகரத்தில் இருக்கும் முக்கியமான மல்டி பிளாசாவின் ஒரு மூலையில் நின்று மாலை மங்கிய நேரம் தான் மாற்ற வேண்டும், என்றாலும் கண்கள் விட்டுவைக்காது. அந்த தருணத்தில் அங்கு வருபவனின் கண்கள் வெறிக்க ஆரம்பிக்கும், கொஞ்சம் தாமதிக்கும், அந்த நேரத்தில் நாரதரின் மனதில் அடங்கியிருந்த காதல் விஸ்பரூபமாக வெளிப்படும். வேகமாக அவளை சென்று மறைத்துக்கொண்டு அவளது அந்தரங்க உடலில் படும், தாகமான பார்வைகளை தவிர்த்துக்கொண்டிருப்பார். பதிலுக்கு அவள் ஒரு புத்தம்புதிய தூஷண வார்த்தையை நன்றியாக செலுத்துவாள். இப்படியான காதல் யாருக்கு வாய்க்கும் என்றார் நாரதர். தேநீர் ஆறுவதற்கு முதலே அருந்துவது நல்லது என்றேன். கற்பனைகள் மிகுந்த தீவிரதன்மையுடன் இருக்கின்றன, கனவிலும் நிஜத்திலும் புரிபடாத தோற்றங்களை ஏற்படுத்திவிடுகின்றன. நாரதரிடம் ஒரு சிரிப்பு மிஞ்சியது "நாராயண" என்றார். பிறகு நீ கடற்கரைக்கு சென்றதே இல்லையா, உனது காதலியை சந்தித்ததே இல்லையா. சந்தித்தேன், சந்திக்கும் போதெல்லாம் அவளின் உடலில் புத்தக வாசம் வருகின்றதுமுத்தமிடச்சென்ற போது, அவள் என்னை தள்ளிவிட்டாள், அவளில் மிகுந்த கோவம் இருந்தது. அவளுக்கு தண்டனை கொடுத்தே ஆகவேண்டும், கடலின் மறுபக்கம் திரும்பி கூவினேன், உன்னிடம் எனது கற்பனைகள் எல்லாவற்றையும் தருகிறேன்,  தூரத்தில் அந்த சிறுவன் மணலுக்குள் கைகளை செலுத்தி மட்டிகளை பொறுக்கிக்கொண்டிருந்தான். அவனது தங்கை தனது கைகளில் வைத்திருந்த சிவப்பு நிற பொலித்தீன் பையில் அவற்றை சேர்த்துக்கொண்டிருந்தாள். இன்று கடல் கொஞ்சம் மனிதர்களை பார்த்துக்கொண்டிருந்தது. மனிதர்கள் தான் கடலைப் பார்க்கப்போகின்றோம் என்று சொல்வது எத்தனை நகைச்சுவையானது என்று நினைத்தேன். யாருமே கடலை பார்க்க முடியாது, கடலை முழுமையாக பார்த்தவன் யாரும் இருக்கின்றனா, கடல் நீரை ஒரு சிரடடைக்குள் விட்டு பார்ப்பதைப் போல தான் பார்க்கின்றோம் ரசிக்கின்றோம். ஆனால் கடலின் எல்லை அது எதோ ஒரு உணர்வுக்கு சமானம் அது எந்த உணர்வு? அதன் பெயர்தான் என்ன உங்களுக்கு தெரியுமா நாரதரே என்றேன், நாராயண என்றார். அந்த உணர்வைப்பற்றி புரிந்து கொள்ளாமல் இருப்பதே கடலை சிறுதுண்டங்களாக்கி ரசிப்பதற்கான ஒரே வழி. மத்தியான வெயிலில் அதுக்கு மேலும் அங்கேயே இருக்க முடியாது ஒரு மணியாகி இருந்தது, இந்த வார இறுதியில் உங்களை சந்திக்கிறேன் என்றேன். வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தேன் ஒரு மணித்தியாலத்தில் பின் வெயில் பயங்கரமாக உடலின் அனைத்து இன்பங்களையும் காலியாக விட்டிருந்ததைப்போல உணர்ந்தேன், தூக்கம் ஒன்று மட்டும் தான் இப்போது இன்பங்களை மீள் நிரப்பும் ஒரே வழி, வீட்டின் கதைவை திறந்தபோது அவள் தான் நின்றிருந்தாள், கனம் பொருந்திய துன்பம் இப்படி ஒரு துன்பத்தை யாரும் அனுபவித்திருக்க மாட்டீர்கள், என்னால் அவளை பார்த்து ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை, கண்கள் சொருக என்னை மன்னித்துவிடு என்பதைப்போல கேற்றின் அருகே விழுந்துவிட்டேன். பிறகு கன்னத்தில் அவள் தட்டியபோது தான் ஒரு எண்பது வீதமான எனது தலையை அவள் தனது மடியில் தங்கியிருந்தாள் என்பது புரிந்தது. சாப்பாட்டு மயக்கம் கொஞ்சம் சாப்பிட்டால் சரியாகிவிடும் என்றாள், தலையை எதோ நூலில் வைத்திருந்த நூல்பந்தைபோல ஆட்டியபடி இருந்தேன், உணவை எடுத்து வந்து வைத்தாள், கருவாட்டுக்குழம்பு கூடவே நெய்யூறிய பருப்புக்கறி, அவளின் அன்பு அனைத்தையும் விட கொடுமையானதாக எனக்கு அந்த நொடியில் இருந்தது. சாப்பிட்டு முடித்ததும் ஆசுவாசப்படுத்திக்கொண்டேன். தலைமுடியினுள் கைகளால் கோதி ஒரு பத்து தடவை அந்த அழுத்தத்தை கொடுத்தேன். வாய் விட்டு எனது அதீத கற்பனைக்காக அவளிடம் மன்னிப்பு கேட்டே ஆக  வேண்டும், கொஞ்சம் எலுமிச்சை ஜூஸ் எடுத்து வந்து எனது எதிரே அமர்ந்துகொண்டாள். நானும் நூலளவு புன்னகைத்தேன், மீண்டும் அவள் என்னையே உற்றுப்பார்த்தபடி இருந்தாள்,  நீண்ட நேரம் மௌனமும் நானும் அந்த ஜூஸ் நிரப்பப்படட கிளாசும், நான் திடீரென்று நிமிர்ந்து கொண்டேன், நேற்றிரவு நான் உங்களுடன் மோசமாக நடந்து கொண்டேனா என்றேன். வெட்கப்பட்டு சிரித்துக்கொண்டிருந்தாள் அவ்வளவு மோசமில்லை நீ. அதற்காக இன்றைக்கும் ஒரு தடவை என்று கேட்டு விடாதே,  நாளை பார்க்கலாம் என்றாள்.

அது கற்பனையே இல்லை எனக்கு தெரியும். இப்போது உறுதிப்படுத்திக்கொண்டேன், கடலின் ரகசியத்தின் ஒரு துண்டு எனக்கு கிடைத்திருக்கிறது. இப்போது முத்தமிட ஏற்ற சமயமில்லை என்று தெரியும் தான், ஆனாலும் ஒரு முத்தம் தேவையாக இருக்கின்றது. கொஞ்சம் வேகமாகவே சென்று கழுத்தில் ஒரு முத்தம் வைத்தேன். அதை ஏற்றுக்கொண்டு பதிலுக்கு லாவகமாக என்னை தள்ளி விடடாள், உனது காதலியின் பெயர் எதோ சொன்னாயே? மறுபடியும் வேகமாக ஒரு முத்தம் வைத்தேன் பாய்ந்து அவள் கழுத்தில் மீண்டு  தள்ளி விட்டாள்.

கடைவாயினால் சிரித்தவாறே சொன்னேன் " மாயா"

Views: 289