நான்

எழுத்தாளர் : திவ்யா தமிழவள்மின்னஞ்சல் முகவரி: chethivya@gmail.comBanner

நான் நானாக
என்னுள் ஆழமாய்
தொலைக்கப்பட்டிருக்கிறேன்
என்னை நோக்கிய
எனது தேடல்கள் எல்லாம் 
இருளில் பிறந்து 
இருளிலேயே மடிகின்றன
கனவுகளில் வந்து தொலையும்
அந்த இருட்டடறையில் தான்
நான் என்னை பதுக்கி விட்டதாய் 
எனக்கொரு ஞாபகம்.....!
இருட்டறையில் புதைந்த நான்
எவராலோ இருளின் சாயத்தால்
அப்பப்பட்டிருக்கிறேன்
வேறு வழியின்றி அந்த எவரில் 
நான் என்னை நிரப்புகிறேன்
அறையின் சுவரெங்கெங்கும்
இருளின் நிலைக்கண்ணாடிகள்
ஒன்றில் கூடமுழுமையாய்
நான் பிரதிபலிக்கப்படவில்லை
சிலதில் நான் நானாகவே
பிரதிபலிக்கப்படவேயில்லை
மூலையில் மட்டும் காலகாலமாய்
ஒரு உடைந்த கண்ணாடித்துண்டு
எப்போது உடைந்ததோ தெரியவில்லை
அநேகமாய் நான் புதைந்தபோது
எனது வெடித்தல்களின்
மீதியாகக்கூட இருக்கலாம்
அந்த உடைந்த துண்டில்த்தான்
என் ஞாபகங்களை எல்லாம்
சாயம் பூசி மறைத்திருந்தேன்
இன்று ஞாபகங்களும் 
எவராலோ களவாடப்பட்டுவிட்டன.
ஆனால் அந்த எவரின்
விம்பம் மட்டும் மிக மிக ஆழமாய்
என்னுள் பதியப்படிருக்கிறது
நான் நானாகலாம்
இல்லை எவராகலாம்
எதுவானாலும் எனது நானுக்காக
எனது தேடல் தொடரும்
Views: 329