பின்னொரு நாளின் யாசகங்கள்

எழுத்தாளர் : ராஜா நர்மிமின்னஞ்சல் முகவரி: rajanarmi0@gmail.comBanner

எனது பிரார்தனைகள் 
இப்படி தான்
இருக்கிறது
ஆண்டவரே

முடவனின்
உடல் உறுப்பு
பற்றிய யாசகமாக

பிறவி குருடனின் வர்ணங்கள் 
பற்றிய அங்கலாய்ப்பாக

ஒற்றை மார்பை 
இழந்த அவளின்
புற்றுநோய் பற்றி
வாதையாக

கலைந்த கருவின் வலி மிகுந்த
அவளின் குருதி
போக்காக

காலமெல்லாம்
என் பிரார்த்தனைகள்
இப்படித்தான் இருக்கின்றது.
Views: 213