உடைதல் மிதக்கும் மாயை.

எழுத்தாளர் : மனுதீரன்மின்னஞ்சல் முகவரி: manutheeran@gmail.comBanner

பொதுமையின் விதிகளை கடந்து
கண்ணாடிக் கிளாஸ் மீதான காட்சி எண்ணத்தின் இறுதி நிமிடத்தில்
காலவினைகளுக்காக
மாயையை உடைத்திருக்கிறது

நிமிடத்தின் முதுகின் வழியாக பேராற்றலுடையதான
காலம் ஓடிச் செல்கின்றது
காலத்தை சூட்சும இருளுக்குள்
கலந்து கொண்டு எதிரே இருந்த
டெபிள் ஃபேன் கிளாஸ்ஸிலினுள்ள
நீரின் தணிகத்திலிருந்து

தன்னை அசைக்கிறது

அந்த கதவை யாரோ அசைப்பதிலிருந்து
கறுப்புத்திரவம் தாங்கிய வார்த்தைகளில்
தன்னைத்தானே சபித்துத் திரும்புகிறது
மோட்சதுணிக்கைகளுக்குள்

பெண்டுலவிதி
இரைச்சலுடனான தேவ வார்த்தைகளும்
அணுவின் இறுதி சிறியதில் நுளைகிறது

மாயை துகளின் பருமன் பெரும்
வேகத்தை இன்னும் சுவாசித்து என் ஆதி கலத்தில் நிறைகிறது

காட்சி சுயங்கள் இன்றிய நினைவுகளால்
இறுக்கம் பெற்றிருக்கிறது

இதோ!!
அந்த மாயை உடைக்கும் தன்மையில்
கிளாஸ் தண்ணீரும்
பாதி மூடிய கதவும்
இரைகின்ற டேபிள்ஃபேன்
இவை போதுமானதாக இருக்கிறது

மாயைக்கு எந்த தத்துவார்த்தங்களும்
அனுபவங்களும் தேவையற்றதுதான்
செயல்கள் பயனற்றதென்றானது
கதவும் தண்ணீரும் ஃபேனும் இருந்தாலும்
அதிகம்தானே மாயை உடைக்க.
Views: 191