அடச்சீ

எழுத்தாளர் : சி.டிசாந்த்மின்னஞ்சல் முகவரி: dishanth2008@gmail.comBanner

எப்படி தொடங்கப்போகிறேன் எதை எழுதப்போகிறேன். முழுதாய் ஒரு இரவு கூட கழியாத நம் உறவின் நினைவுகளை புனைய ஆரம்பிக்கையில் ஏதோ ஒரு பதற்றம்.
சீரன மேல்தாடை பற்கள், நீக்கல் உள்ள கீழ்தாடை பற்கள் செத்தல் மிளகாய் நிற உதடு கூரிய மூக்கு பேர்முடா முக்கோணவலய கண்கள் என் உன் அலாதியான முகம் எனக்கு மட்டும் கசப்பு நெல்லியை தின்றபின் குளிர்ந்த நீரை பருகையில் வரும் ஆனந்ததை குடுக்கும். உன்னை பற்றி எண்ணுகையில் உன் கீழ்தாடையின் வெட்டும்பற்களுக்கிடையே உள்ள இடைவெளியில் இருந்தே உன் முகம் விரிய ஆரம்பிக்கும். ஒரு ஏரியில் உடைந்து போன ஒரு நிலவின் பாகங்களை பொறுக்கியெடுத்து ஒன்று சேர்க்கும் ஒரு குழந்தையாய் உன் நினைவின் பாகங்களை பொறுக்கியெடுத்து பொருத்த முனைகிறேன். அள்ளியெடுக்கையில் வழுக்கி விழும் துண்டுகளை மீள மீள பொறுக்கியெடுக்க முனைந்து தோற்றுப்போகிறேன்.

உன் நினைவுகள் எப்பொழுதும் பசுமையானவை அவை பற்றி மீள அசைபோடபோகிறேன் என்னும் பொழுதே அந்த பச்சை நிறம் என்னை ஒரு பகலை இழந்த நிலத்தை இருள் வாரி இழுத்து தன்னுள் மறைத்து கொள்வதைப்போல அந்த பச்சை நிறத்துக்குள் தொலைந்து போய்விடுகிறேன். அந்த தொலைதல் என்பது மிக கொடுமையானது. சில சமயம் நிலவாய் இருக்கும் நினைவுகளும் சேர்ந்து தொலைந்து போக எங்கும் பச்சையாய் மாறிவிடுவது எவ்வளவு கொடுமையானது. ஆக உன் நினைவுகள் பற்றிய புனைவுகளை பச்சை நிறத்துடன் ஆரம்பிக்கவா....?? பச்சை பற்றியே பச்சை பச்சையாய் கதைத்து இறுதியில் பச்சை பைத்தியமானது என்றில்லாமல் பச்சையை நினைத்துகொண்டு பச்சையாய் எழுத தொடங்குகிறேன் உன் பச்சை நினைவுகளை. 

ஒரு பொதுவெளியில் ஒன்றறை மணிநேரம் ஒற்றைக்கால் தவத்தின் இறுதி வினாடிதுளிகளில் நீ வந்துதித்தாய் உன் கறுத்த பட்டாம்பூச்சியை முறுக்கியவாறே. அன்றும் நீ பச்சையே அனிந்திருந்தாய். எங்கோ இருந்து ஒரு சோமாலிய குழந்தை வந்தது போல் ஜந்து வருடங்களுக்கு முன் தலையணி உள் அடைந்திருக்கவேண்டிய பத்துவருடத்திற்க்கு முற்பட்ட உன் மேலங்கி ஒன்றை அணிந்திருந்தாய்.முன்பொருகாலம் ஒரு பித்து பிடித்து விவிலியத்தின் பழைய எற்பாடுகளை எல்லாம் பலமுறை வாசித்து அங்கு சொற்கள் அடுக்கியுள்ள விதத்தில் உருகி கிடந்துள்ளேன். கடவுள் உலகைப் படைத்தபின், கிழக்கே உலகின் அனைத்து வளங்களும், சந்தோஷங்களும் நிறைந்த ஒரு தோட்டத்தை உருவாக்குகினார். இதற்கு 'ஏதேன்' எனப் பெயர். தன் மூச்சுக்காற்றை ஊதி ஆதாமுக்கு உயிர் கொடுத்து ஏதேன் தோட்டத்தில் அவனை நிறுவினார். அந்தத் தோட்டத்தின் நடுவில்தான் நன்மை தீமையை உணரச்செய்யும், கனிதரும் மரம் இருந்தது. கடவுள் ஆதாமிடம், "இங்கிருக்கும் எல்லா மரங்களின் கனிகளையும் நீ உண்ணலாம், ஆனால் நன்மை தீமையை உணரச் செய்யும் இந்த மரத்தின் கனிகளை உண்ணக்கூடாது, உண்டால் நீ இறப்பது நிச்சயம்" என எச்சரித்தார். ஆதாம் எல்லா ஜீவராசிகளுக்கும் பெயரிட்டான். அவன் தனிமை கண்டு கடவுள், இவனுக்கு ஒரு துணையை செய்வோம் என, அவனைத் தூங்கச் செய்தார். ஆதாம் தூங்கும்போது அவனது விலா எலும்பில் ஒன்றை எடுத்து பெண்ணைச் செய்து ஆதாமிடம் கொண்டுவந்தார். அவனும் அவளுக்கு 'ஏவாள்' எனப் பெயரிட்டழைத்தான். ஆதம் ஏவாளை கடவுள் படைத்தான் எனின் பின்பு ஏன் ஆதம் ஏவாளிற்க்கு தொப்புள் கொடி என மூளையை பிசைந்து கொண்டிருந்த கேள்விகள் எல்லாம் ஆதம் ஏவாளை கடவுள் படைத்தாரோ இல்லையோ ஏவாள் விலா எலும்பில் இருந்தே படைக்கப்படாள் என உறுதியாக்கிகொண்டேன்.

அமையாள் கிழவி பற்றிய புனைவு ஒன்றை கையில் திணித்து விட்டு வாசிச்சுட்டு சொல்லுங்க என்று சென்றாய். அன்று அமையாள் கிழவியும் நானுமாய் பின் நானும் அமையாள் கிழவியும் நீயுமாய் என குப்பற நிர்வாணமாய் மிதந்த கிழவியின் உடல் போல் சேர்ந்தே மிதந்தோம்
உனது பேச்சுக்கள் மிகவும் அலாதியானவை, முப்பரிமாணமானவை. ஒரு தளத்திலிருந்து பிறிதொரு தளத்திற்கு மிகச்சுலபமாய் கட்டுடைத்து நீ நகர்த்துவாய். அமையாள் கிழவியின் அம்மணக்குழியலில் சூட்சுமங்களை நீ உடைத்த பொழுது நானும் உடைந்தே போனேன்.
பிறிதொரு மழைநாளில் நானும் நீயும் ஒரு குடைக்குள் கொஞ்சம் கவிதை கடன் வாங்க கால் நடை சென்றோம். அன்று கொட்டித்தீர்த்த என் உணர்வலைகளை உன்மீது படாதவர்ணம் என் குடை பாதுகாத்துகொண்டது. இருபது விரல்களும் நான்கு கண்களும் ஒருசேர்ந்து நின்றகணத்தில்....


*
*
*
அடேய் எழும்பலயா....??
அடச்சீ.....
Views: 232