உவங்களை பற்றி இவங்களிடம் இருந்து.....!

எழுத்தாளர் : உவங்கள்மின்னஞ்சல் முகவரி: editor.uvangal@gmail.comBanner

அன்பு கொண்ட வாசகர்களுக்கு 

உவங்களின் இனிய வணக்கமும் பேரன்பு கொண்ட புதுவருட வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறோம். வழமை போல இம்முறையும் உவங்கள் உங்களை மகிழ்வுற வைக்கும் என முழுவதுமாய் நம்புகிறோம். புதியவர்களுக்கான களம் அமைப்பதில் நாம் எப்பொழுதும் பின்னுக்கு நிற்பதில்லை. ஒவ்வொரு முறையும் புதியவர்களை அறிமுகம் செய்யவே விரும்புகிறோம். வழமை போலவே இம்மாத உவங்கள் இதழ் வடிமைப்பை மேற்கொண்ட துவாரகன் பேரின்பநாதன் அவர்களுக்கும் முகப்பு ஓவியத்தை வரைந்தளித்த சுலக்சன் அவர்களுக்கும் எமது நன்றிகள்.  

கொண்டாட்டங்கள் எம் வாழ்வில் பின்னி பிணைந்தவை. ஒவ்வொரு கொண்டங்களும் ஒவ்வொரு மக்கள் கூட்டதுடனும் அதன் கலச்சாரத்துடன் பிணைந்தவை தனித்துவமானவையும் கூட. கொண்டாங்கள் அற்ற வாழ்வு வெகுசீக்கிரமே சலித்து போய்விடும். ஆனால் நாம் எந்த விசயத்தை கொண்டாட்டமாக நினைக்கிறோம் என்பதில் தான் சிக்கல்கள் உருவாகின்றன. சமகாலத்தில் சினிமா கொண்டாட்டமாக மட்டும் பார்க்கப்படாமல் அடுத்த நிலையை நேக்கி நகர்வதை உணர்கிறோம். சினிமாவை வெறும் சினிமாவாகவே மட்டும் கொண்டாடல் வேண்டும். சினிமா பாணியில் வாழ்க்கையை அமைத்துகொள்ள முனைதல் சினிமா பணியில் சிந்தித்தல் சினிமா நடிகர்களை தலைவர்களாய் ஏற்றுகொண்டு கொண்டாடுதல் அனைத்தும் மிக அபாயகரமானவை. முப்பது வருட போரட்டத்தின் பின் இன்னமும் போராடிக்கொண்டிருக்கும் ஒரு சமுதாயம் அதன் தனித்துவதை இழந்துவிடல் கூடாது. 

அண்மையில் யாழ் கலைஞர்கள் என நம்மில் ஒரு குழு ரஜனி வராமல் போனதற்காய் ஒரு போராட்டதில் ஈடுபட்டது. ஏற்கனவே போராட்டதின் நோக்கங்கள் பற்றிய ஒரு கலந்துரையாடலை கடந்த உவங்கள் ஆசிரியர் தலைப்பில் கலந்துரையாடி இருந்தோம். அந்த போராட்டதில் ஈடுப்பட மக்களை பார்க்கையில் மிக அப்பாவித்தனமாய் இருந்தது. போராட்டத்தின் நோக்கமே தெரியாமல் பாதகைகளுடன் வீடு தாரன் எண்டாங்கள் வந்தோம் எண்டு சொல்லும் போது மிகவும் பரிதாபமாய் இருந்தது. விஜயின் 63வது பட பாடல் வெளியாகியமையை கொண்டாடும் அதற்கு தன் காசில் சுவரொட்டி அடித்து ஓட்டும் எம் இளையவர்கள் எவ்வளவு வெள்ளேந்தி மனத்தவர்கள். சினிமா தொடர்பான கொண்டாங்களை நாம் மீள்பரீசில் செய்யவேண்டும். சினிமாவை சினிமாவாக மட்டும் கொண்டாட வேண்டும்.

உவங்களை கொண்டாட தொடங்கி அரையாண்டு ஆகிறது. ஆதரவளிக்கும் அனைவருக்கும் அன்புகலந்த நன்றிகள். தொடர்ந்தும் ஆதரவை வேண்டி நிற்கிறோம். எம் உறவுகள் அனைவருக்கும் மீண்டும் இனிய புதுவருட வாழ்த்துகள்.
Views: 547