பயணப்படுதல்

எழுத்தாளர் : ஆதி பார்த்தீபன்மின்னஞ்சல் முகவரி: aathiabi13@gmail.comBanner

1.

நீல வானத்தில் மேகங்கள் பிரிந்த பிறகு 
அழுவது பறவைகளா
மழை என்று சொன்னேன் - முட்டைக்குள் இருக்கும் 
கண்ணீரின் நீர்மை எது 
பேரன்பு முகம் தெரியாத ஓர் உள்ளங்கை மடிப்பு, மடியின் 
கதகதப்பு 
பறவைகளோ மழையின் கண்ணீரும் கண்ணீரின் மழையும் 
விரும்பிய போதும் திரும்ப மறுத்த அன்பின் முகம் யாரது 
சென்ற போதும் விட்டுச்சென்ற பாதங்கள் தான் 
பின் வந்து செல்வோரை எல்லாம் தாங்கும் நிலம் 
ஏனெனது நிலமெங்கும் வெடிப்பின் சரடுகள் 
ஓர் உரையாடலில் தங்கி நிற்கும் கரு மனது 
அதனால் 
பூமியெங்கும் பெண்ணின் வடிவிலொரு அன்பு

2.

தெரியாமல் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் திறக்கின்றேன் 
ஒளியின் மௌனத்தில் காத்திருக்காது 
இருளுக்கும் ஒளிக்கும் மாறி மாறி ஒளிகின்றாய்
ஞானத்தின் நரம்பெங்கும் ஓடும் பெருநதியின் சலசலப்பில் 
கல்லெறியும் சிறுமி 
படடமரக்கிளையில் வந்தமரும் ஜோடிப்பறவைகள் 
பிழைப்பதேது - இரண்டும்

3.

வண்ணம் பூசப்படட கடல் நிலம், வலை வீசி நிற்கும் மீனவன் நான் 
மீன்களின் மொழிகளை பிரிந்து  
கடல் அழும் போது கண்ணீர் எங்கு சென்று காயும் 
கடல் நடுவில் துடுப்பின்றி தவிக்கும் மனம் ஒரு காடு 
கடலின் நடுவில் சுழலும் காடு 
வேடடைக்கு ஏங்கும் மனம் ஒரு தீவு 
நீயும் நானும் பிரிந்து சேரும் உயிர்வன

4. 

உன் காதலில் சுழலும் உலகு
(ஆதி.பா) கிரிசாளினிக்கு
Views: 425