உவங்களை பற்றி இவங்களிடம் இருந்து.....!

எழுத்தாளர் : உவங்கள்மின்னஞ்சல் முகவரி: editor.uvangal@gmail.comBanner

பேரன்பு கொண்ட  வாசகர்களுக்கு

உவங்களின் இனிய வணக்கமும் பேரன்பும். வழமை போல இம்முறையும் உவங்கள் உங்களை மகிழ்வுற வைக்கும் என முழுவதுமாய் நம்புகிறோம். காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் உவங்கள் சற்று பிரதிபலித்த போதும். இம்முறையும் பின்னிற்காது உவங்களை உங்களிடம் சமர்ப்பிக்கின்றோம். வழமை போலவே இம்மாத உவங்கள் இதழ் வடிமைப்பை மேற்கொண்ட துவாரகன் பேரின்பநாதன் அவர்களுக்கும் முகப்பு ஓவியத்தை வரைந்தளித்த சுலக்சன் அவர்களுக்கும் எமது நன்றிகள்.  

தேவைகள் நிறைவேற்றாத சந்தர்ப்பங்களில் முரண்பாடுகள் தோற்றம் பெறுகின்றன. இத்தேவைகள் நிறைவேறாது போவதற்கு தேவைகளின் மீது பூசப்படும் புனித விம்பமும் காரணமாகிறது. இது தேவையின் அளவை அல்லது தேவையின் நிறைவேற்றத்தை கட்டுப்படுத்துகிறது. அது காலப்போக்கில் தேவை நிறைவேறாது தேக்க நிலை அடைந்து முரண்பாடுகளையும் உளசிக்கல்களையும் ஏற்படுத்துகிறது. எனவே தேவைகளை தேவையாக பார்க்கும் மனநிலை ஏற்படுத்தும்  சந்தர்ப்பங்களை சமூகங்களிடையே ஏற்படுத்த வேண்டும். ஆனால் இவை முறைசாராது எமது வாழ்வியலுடன் இணைந்து காணப்பட்டது என்பது குறிப்பிடதக்கது. அவற்றை நினைவு கூர்ந்து அவைபற்றி உரையாடுவது மட்டும் ஆரோக்கியமான சமூகத்தை   உருவாக்க வல்லதல்ல.  மானிடசிக்கல்களை  அறிவுபூர்வமாக அணுகும் இலக்கிய போக்கை உருவாக்கவேண்டிய சூழலே தற்போது காணப்படுகிறது.  

ஆதரவளிக்கும் அனைவருக்கும் அன்புகலந்த நன்றிகள். தொடர்ந்தும் ஆதரவை வேண்டி நிற்கிறோம்.
 
Views: 460