இயல்பாய்....

எழுத்தாளர் : துவாரகன்மின்னஞ்சல் முகவரி: Thuvvva@gmail.comBanner

பழிவாங்க காத்திருக்கிறவன்
லேபளுக்குள் கிடக்கிறது
காலாவதியான
என் கொடிய விஷம்

முதுகுத்தசையில் 
பதியம்வைத்த
ஈட்டியின் திசையில்
நீ எதற்கு நின்றிருந்தாய்

காயங்களை ஊதிக்கொண்டிருந்த
சிறுமியின் நகங்களிற்கு 
என் சதைத்துகள்கள்
இடமாறியது
தற்செயலாகவே
இருந்து விடட்டும்

நீ விரல்க்கொம்பு வைப்பதான
புகைப்படக்கனவுகளுக்கு
இரவு முடிந்துவிட்டதில் 
இன்னும்
நம்பிக்கையில்லை

முழுதுமாய் மறந்துபோன பாடல்
எதுவென்ற கேள்விக்கு
முதல்வரியிலிருந்து
பாடிக்காட்டத்தொடங்கிவிட்டேன்

பறந்துகொண்டிருந்த 
பட்டுப்பூச்சியை 
அதன் திசையிலேயே
இயல்பாய் விட்டிருக்கலாம்
Views: 497