நானாகிறேன்

எழுத்தாளர் : குட்டா செல்வாமின்னஞ்சல் முகவரி: sugankey12@gmail.comBanner

அட.. சீ.. மானங்கெட்ட மனமே! 
இறந்து போ...!
நான் நிஜத்தை
துறந்தும் துரோகி எனில்.......!
எக்கணம் இனி என்னுடையதாகும்....?
யார் முகமூடிக்குள்ளும் வாடகை கொள்ளாதது பிழை என்றால்....!
நான் பிழைத்தே போகிறேன்..! 
விடு.

இது....!
நாளைய எனக்காக 
நேற்றைய ஒட்டுமொத்த இறத்தலின் பிரயாசை...!
வெறும் மூச்சும்...!
இச்சை பேச்சும் ...!
என் வாசலுக்கு வேண்டாம் ..!
எத்தனையோ ஏளன புன்னகை..!
கருவறுத்துக் கொண்டிருக்கும் சில பார்வைகள்...!
அத்தனைக்கும் சேர்த்து நான் புன்னகைக்க வேண்டும் ...!
இனி
நான் நானாகிறேன்.
Views: 436