உவங்களை பற்றி இவங்களிடம் இருந்து.....!

எழுத்தாளர் : உவங்கள்மின்னஞ்சல் முகவரி: editor.uvangal@gmail.comBanner

கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்ல

உன்னை தூங்கவிடாது வைத்திருப்பது

          அப்துல் கலாம்


உவங்களின்  உறவுகள் அனைவருக்கும் எமது வணக்கங்கள் . உவங்களின் சனம் 01 ஆள் 09 ஆடிமாத இதழாக வெளிவருகிறது. இம்முறையும் புதியவர்களை அறிமுகம் செய்திருக்கிறோம். உவங்கள் இரண்டாம் ஆண்டை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறது என்ற மகிழ்வான செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். உவங்களின் இப் பயணத்தில் வாசகர்கள் ஆகிய உங்களின் பங்கு அளப்பரியது. உவங்களில் வெளிவரும் படைப்புக்கள் பற்றிய உங்கள் பார்வையே உவங்களின் வளர்ச்சிக்கு துணை நின்றது. அது போன்ற உங்களின் கருத்துகளை  மேலும் எதிர்பார்கிறோம். உங்கள் கருத்துக்களை நீங்கள் எமது  Editor.uvangal@gmail.com என்ற எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க முடியும், அல்லது உவங்களின் முகநூல் பக்கத்தில் பதிவு செய்ய முடியும். இலக்கியத்தை ஆரோக்கியமான வளர்த்தெடுத்தல் எனும் உவங்கள் குழுமத்தின் பெரும் கனவுக்கு நீங்கள் ஆதரவு நல்குவீர்கள் என நம்புகிறோம். கடந்த இதழில் தவிர்க்க முடியாத காரணத்தால் இரு படைப்புகள் தவறவிடப்பட்டன. அச்செயலுக்கு மனம் வருந்துகிறோம்.

இம்முறையும் உவங்களின் முகப்பு படத்தை வரைந்த சுலக்சன் அவர்களுக்கும் முகப்பு படவடிவமைப்பை மேற்கொண்ட துவாரகன் அவர்களுக்கும் உவங்களின் நன்றிகள். ஆதரவளிக்கும் அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள். தொடர்ந்தும் இணைந்திருப்போம்

 

Views: 627