தேவனுக்கான பிரார்த்தனை

எழுத்தாளர் : மதுஷா மாதங்கிமின்னஞ்சல் முகவரி: 1989mathangi@gmail.comBanner

தேவனே எங்குற்றாய் ?
 உன் நினைவுப் பெருவெளியை நீட்டிக் கொண்டிருந்தவள் வாசல் தாண்டி, தன் திரை தின்றவளாய், 
 சாலையோர சருகளிடம் எல்லாம் உன் முகவரி கேட்டு அலைந்து கொண்டிருக்கிறேன்......! 
உனக்கும் எனக்குமான உன்னதப் பொழுதுகளை எல்லாம் ஓர் மரணப் பையில் நிரப்பியபடி சாம்பல் மனிதர்களிடையே அந்தரித்துக் கொண்டும் இருக்கிறேன்
 நீ இறுதியாய் விட்டுச் சென்ற இடங்களில் எல்லாம் உன் வாசம் நுகர்ந்து தான் உயிர் தரிக்கிறேன். 

பேரன்புக்குரிய தேவா சூனிய தேசத்தில் மலர்களை வரைய கற்றுத் தந்தது நீ தான்....! 
சாம்பல் மேடுகளில் நின்றாடும் கழுகுகளை எந்த வண்ணம் கொண்டு வரைந்து கொள்ள?
பலி கேட்கும் தேவதைகளை எங்கே பட்டியல் படுத்த
இறந்து போகும் சொற்களின் அர்த்தத்தை எந்த ஞாயிற்றுக்களில் உயிர்ப்பிக்க?


தேவனே நீ, விட்டுச் சென்ற இடங்களில் எல்லாம் ஏன் இப்போது துர்வாசனை .........?
Views: 216