சிதறிய சிரிப்பொலிகள்

எழுத்தாளர் : கோபிநாத்மின்னஞ்சல் முகவரி: gobinath0028@hotmail.comBanner

என் கதை கேள் உன் இதயம் கூட இரத்தம் சொரியும்
என் வாழ்வினைப் புரட்டிப் போட்ட அந் நாள்
அன்பான அன்னை அடியாத அப்பா அழகான தங்கை 
எங்கும் சிரிப்பொலி என சந்தோஷம் பொங்கும் இனியதோர் இல்லம்

சிரிப்பொலியின் மத்தியில் சிறுவனாக இருந்த என்னை
- சிதற வைத்த அந் நாள்
யுத்த்தின் உக்கிரம், உயிர் தரித்த மண்ணீல் 
- உயிர் அச்சம் உணர்ந்த அந் நாள்
செல்லும் இடம் அறியோம் சென்றடைவோமா என்றறியோம்
- உயிர் வாழ எண்ணி
சொந்த மண் இழந்து உற்றார் உறவினர் நண்பர் இழந்து
- புறப்பட்டோம் அகதியாக

கதறிய ஒலிகள் காதில் கேட்க கால்கள் மட்டும் 
- ஏனோ நகர்வதை நிறுத்தவில்லை
திடிர் என ஓர் வெடிச் சத்தம் என் கண் முன்னே சிதறி விழுந்தது 
- என் சிற்றுலுகமிரண்டும்
கருவறையில் சுமந்தவள் கை பற்றி நடை பயில்வித்தவன்
- கட்டி அணைக்கவும் முடியவில்லை
கதறி அழுவதற்கும் நேரமில்லை புறப்பட்டேன்
- தங்கையுடன் கண்ணீர் மல்க

உயிருக்காய் ஓடிய நெரிசலில் உடன் பிறப்பையும் பிரிந்தேன்
கத்தினேன் கதறினேன் எவ்வித பயனும் இல்லை  
என் கை பற்றியது ஓர் கரம் - என் பள்ளி ஆசிரியை
வந்தடைந்தோம் முள்வேலியை, அன்னியனுக்கு அடிமையாக

யுத்தம் முடிந்தது காலமும் கடந்தது கவலை தான் தீரவில்லை
என் பெற்றோரை எண்ணி அழாத நாளில்லை
என் தங்கையை தேடி அலையாத முகாமில்லை
தங்கைக்காய் காத்திருக்கிறேன் முள்வேலியின் மத்தியில்......
Views: 522