நேசத்தின் தோல்வி

எழுத்தாளர் : சி.டிசாந்த்மின்னஞ்சல் முகவரி: dishanth2008@gmail.comBanner

பிரிய சகி

தேக்கிவைத்த உன் நினைவுக்குளத்தில் 
கல்லெறிந்து விட்டார்கள்
என் அறையெங்கும் உன் வாசம்
உன் நினைவலைகள் எனை துரத்த
திக்கற்று அலைகிறேன்

சிதைந்து போன 
என் நினைவு சிமிழ்களைபத்திரமாய் திறக்கின்றேன்
ஒவ்வொன்றிலும் உன் ஏளனச்சிரிப்புகள்
உருக்குலைந்து போன நம் நினைவு குறிப்பேடுகளில்
நம் ஜீவன் சுவாமிழ்ந்து கிடக்கிறது

நம் மௌனத்தில் குழைந்து
அலத்தல்களை அளவிட்டு
உழன்று கொண்டிருக்கிறேன்
இந்த அவஸ்த்தைகளை எப்படி தாங்கி கொள்வது..?

மிச்சமாய் கிடப்பது என்னவே

உக்கிரமான
நேர்மையற்றவன்
பழமைவாதி
பதற்றம்
அத்தியாவசியமான அநாவசியம்

அற்பமான 
இழிபிறப்பு
பரிகாசம்
பகிங்கரம்
தொட்டிமீன்

உன் அகங்காரம் பிடித்த நினைவுகள் அப்படியே கிடக்கட்டும்
கட்டுடைப்புகளை கொண்டாடு
அதற்கு உறவுகளின் அருமை தெரியாது
அன்பும் பாசம் நிறைந்த ஒரு பறவையை உன் கொடூரச்சொற்களால்
கொன்றுபோட்டாய்

உன் சுயத்தை புனிதப்படுத்திகொள்
நான் இப்படியே அரூபமாய்
தொலைந்து போதல் வேண்டும்!!
Views: 583