உவங்களை பற்றி இவங்களிடம் இருந்து.....!

எழுத்தாளர் : உவங்கள்மின்னஞ்சல் முகவரி: editor.uvangal@gmail.comBanner

பேரன்பு கொண்ட வாசகர்களுக்கு அன்பு கலந்த வணக்கம்

மீண்டும் ஒரு புதிய இதழில் புத்துணர்ச்சியுடன் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. சனம் ஒன்று ஆள் பத்தினொன்றுக்கான இதழ் இந்த முறையும் உங்கள் இலக்கியப்பசிக்கு விருந்தளிக்கும் என்பதில் உறுதியாய் உள்ளோம். இந்த உரையாடல்கள் வெற்றிகரமாய் நிகழ்ந்து கொண்டிருப்பதற்கு உதவிக்கொண்டிருக்கும் வாசக உள்ளங்களுக்கு அன்பு கலந்த நன்றியை தெரிவித்துகொள்கிறோம். வழமை போலவே இந்த இதழுக்கான அட்டைப்படத்தினை தந்துதவிய சுலக்சன் அவர்களுக்கும் அடைப்பட வடிவமைப்பை செய்த துவாரகன் அவர்களுக்கும் நன்றிகள்


ரொஹிங்யா வில் நடைபெறும் மனித வன்முறைகள் தொடர்பாய் கண்கூடாக பார்த்து அக்கொடுமைகளின் வாழும் சாட்சியங்களாய் ஆகிக்கொண்டிருக்கிறோம். மதம் என்பது சென்ற காலகட்டத்தின் பண்பாடும் ஞானமும் நம்பிக்கைகளும் முழுக்க தொகுக்கப்பட்ட ஓர் அமைப்பு. மதத்திற்கு வெறி என பிறிதொரு நம்பிக்கையும் உண்டு. அன்பு அகிம்சை போதிக்கும் ஒரு மார்க்க பாதையை பிழையாக வழியெட்டியவர்களின் வெறித்தன செயல்கள் அனைத்தையும் உவங்கள் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்.

இவ்வுலகில் உள்ள சகல மதக்கோட்பாடுகளின் அடிப்படையும் அன்பை மட்டும் போதிப்பதாயே உள்ளது. பாதைகள் வேறு வேறாய் இருப்பினும் முடிவுப்புள்ளி ஒன்றே.
சகமனிதனை இம்சித்து அதன் அழிவில் வெற்றியினை அடைந்து விட நினைப்பது ஒரு குறுகிய வட்டச் சிந்தனை. மனிட தவறுகளை அன்பின் வழி வென்றெடுத்து அன்புடன் வாழ்வோம்.

அன்பு ஆட்சி செய்யுமிடத்தில் அச்சமில்லை. தூய அன்பு அச்சத்தைத் துரத்திவிடக்கூடிய வலிமை கொண்டது. -இயேசுபிரான்

எப்படி வேண்டுமானாலும் சமையுங்கள். ஆனால் அன்போடு பரிமாறுங்கள். -இங்கிலாந்து பழமொழி

உலகில் மிகவும் தெய்வீகமானது எது? சக மனிதனிடம் நீங்கள் காட்டும் அன்புதான். –வால்டேர்

அன்பே சிவம்
Views: 639