இறைவி

எழுத்தாளர் : கோபிநாத்மின்னஞ்சல் முகவரி: gobinath0028@hotmail.comBanner

உயிர் கொண்ட ஜடமாக உணர்வற்ற மனிதருள்
விடியலில் விடைபெறுவேன் இருளினில் துயில் கொள்ளேன்
விலையற்றதை விலையாக்கினேன் விதியின் சதியால்
பஞ்சு மெத்தயில் பஞ்சத்திற்கான ஓர் படுக்கை

பாரினில் மனிதர்கள் பலவகை அதில் நானும் ஓர் வகை
வலிக்கிறது ஒவ்வோர் இருளும் துடிக்கிறேன் ஒவ்வோர் கணமும்
உடலால் ஒராயிரம் இருப்பினும் உள்ளத்தால் ஓர் ஓவியம்
வரைந்திட வழியின்றியே, இவ் ஏழ்மையின் சிரிப்பினில்

உணர்வுகளை தொலைத்தேன் வலிகளைப் பொறுத்தேன்
உயிர் கொடுத்த உள்ளத்திற்காய் உடன் பிறந்த பிறப்பிற்காய்
உறக்கம் தொலைத்த விழிகளாய் உருக்குலைந்த மேனியாய்
நடை பிணமாக்கிய நய வஞ்சகர் மத்தியில் நானும்

விலைமாது என்றோ, மாது என்பதை மறந்திட்ட இவ் உலகினில்
அன்பால் அரவணைத்திட அருகிருப்பவன் அண்ணனும் அல்ல
கவியால் காதல் பேசிட காத்திருப்பவன் காதலனும் அல்ல
காம இச்சை தீர்த்திட வரும் காமுகர்கள் அவர்கள்

இதயலமில்லா இறைவனால் இரையானேன் மிருகங்களிற்கு
அன்பிற்காய் ஏங்குகிறேன், அருகிருப்பது அசிங்கம் என்பதை மறந்து
நிலவொளியான நிஜ வாழ்க்கை கதிரொளியாக கனா காண்கிறேன்
தினமும் நிலவொளியில் உடலுறவில் நடை பிணமாக நான்
Views: 458