செத்திருக்கலாம்

எழுத்தாளர் : லாவண்யா குமார்மின்னஞ்சல் முகவரி: v.lawanyakumar@outlook.comBanner

பைபிள் வகுப்பு முடிஞ்சு வீட்ட வரும் போது தான் அத கண்டேன் .. 
அது.. அது தான்.. அது அவளோ இல்ல அவனோ எண்டு நான் இன்னும் கானல்ல.. இப்போ அத கண்டு பிடிச்சகானும் ஏன்டா எண்ட எண்ணமும் சத்யமா எனக்கு வரல்ல .. சைக்கிள வீட்ல ஏத்தி விட்டுட்டு..
'அம்மா அது எங்கால'
'எது' 
'அதான்.. அந்த நாய்குட்டி' 
'எந்த நாய் '
'உதுல.. உந்த தெருவுல நிக்குதே..'
'எங்க நிக்குது? ஆ? ...'
அந்த வியப்பு எனக்கு விளங்காமலில்லை.. 
'அந்த கருப்பு குட்டிமா... சின்னன்..'
அதோ...
தெரியல்ல.. யாற்றையோ பெட்டை நாய்..

ஹ்ம்ம்ம்.. நேற்றே அந்த மனிசனுக்கு சொன்னன் .. அவள் வராள்.. அந்த குட்டிய கொண்டு பொய் விடுங்கோ எண்டு.. சொல்ற வேலைய செஞ்சா தானே... இப்போ இவள் வந்து விசர்க்கத பறஞ்சு கொண்டு இருக்கிறாள் ... இந்த வீட்ல யார் எண்ட சொல்ல கேக்கினம்..
சரி.. அவ தொடங்கிட்டா

அந்த அவள் நான்தான். நான் கொண்டு வந்த நாயை கொண்டு போய் காடு காட்ட விட மாட்டேன் எண்டு நினைச்சு அம்மா சொன்ன்னது. நாய் குட்டிகளுக்கும் எனக்குமான தொடர்பு முடிஞ்சு பொய் நிறைய நாளாகிட்டு.. அது இவைக்கு தெரியாது.. இப்போலாம்  பக்கத்துக்கு வீட்டு நாய பாக்குறது கொஞ்சுரதொட சரி... சிலநேரம் அதே பெரிய விஷயம் தான்.

அதுவும் அந்த நாய் என்ன பாத்தோன வேலிப் பொட்டுக்குள்ளால பாஞ்சு வரும்.. நான் வீட்ட நிண்டா நிக்குறதும் இங்க தான்..அதால  தான் அத விலத்த முடியல்ல.. மத்தபடி அதில காதல் ஒண்டும் இல்ல.. 

இப்போ இந்த குட்டிய பாக்கும் போது வளர்க்கலாம் எண்டு ஆசையா இருந்தது.. 
பெட்டை குட்டிஎண்டா வளர்க்க விடாயினம்.. தெரியும்..  

அம்மா அத வளப்பமோமா?
வேண்டாம்.. 
வீட்டுல நாய் வழக்க ஏலாது..
ஏனம்மா??
அது பெட்டை நாய்.. நாளைக்கு வளைந்து குட்டி போடும்.. கரைச்சல்.. உள்ள கடுவன் நாய் முழுக்க இந்த வீட்ட தான் சுத்தும்.. இரவில தூங்க ஏலாது... சும்மா ஊளையிட்டுக் கொண்டு திரியுங்கள் ..ஊர்ச்  சனங்கள் எல்லாம் பேசும்.இஇ நாளைக்கு தேவலாத பிரச்சன.. நாலஞ்சு குட்டி போட்ட யார் பாக்குறது.??  பிறகு அதுகள் இந்த இடம் வழிய எல்லாம் ஓடி திரிய..மரங்கள கிண்டும்.. போன தடவையே இதான் நடந்தது.. 
இது பொடியன் நாய் அம்மா..
இல்ல பிள்ளை அது பெட்டை தான்..  பொடியன் நாயா ஆராவது தெருவழிய விடிவினமோ???


உண்மை தான் பொடியன் நாய்கள் யாரவதாலோ வாங்கப் பட்டு விடும்.. இல்லை தூக்கப் பட்டு விடும்.. இல்லை விரும்பப்பட்டு விடும்..
ஆனால் பெட்டை குட்டிகள்??...
இந்த வெறுப்பு எங்கிருந்த்து முளைப்பதென்று தெரியவில்லை.. 
எல்லா இனங்களிலுமே இருக்கும் ஏற்றத்தாழ்வுகள்.. 
பெண்கள்..அது ஒரு சுமை என்ற அளவில் மாறிப் போனது.. 
வெளியே வந்து பார்த்தேன்.. பசி போல சோர்ந்து படுத்து இருந்தது.. கொஞ்சம் பால் ஆத்தி வைச்சு விட்டேன் இரவு.. அம்மாக்கு தெரியாமல்....

அம்மப்பா சொல்லுவர் உனக்கு நாய தான் கட்டி வைகொனுமேண்டு.. ஐய் நல்லது.. எண்டு சொல்லுவன்..  அப்ப எல்லாம்  எண்ட நாயும் ஒரு இளவரசன்... சாபத்தால நாயா மாறி இருக்கும் அத  நான் கலியாணம் கட்டினா அந்த நேரம் அது தேவனாகிடுமோ எண்டெல்லாம் யோசிச்ருக்கன்.. 
எனக்கு பெட்டை நாய் எண்டாலே  விருப்பம் தான்... அது தான் சும்மா  சுத்தி சுத்தி வரும்..  அழகா இருக்கும்.. பாசமா இருக்கும்.. கியூட்டா இருக்கும்.. அது இருக்கதால என்ன வந்துரும்??? கூப்பிடும் போது வால ஆட்டிக் கொண்டு காலுக்க வரும் போது அழகா நெளியும்.. அத கிள்ளிப் பார்த்து ரசிப்பன்.. சொக்கில கிள்ளினாலும் கோவிக்காது..  நல்ல வால வால  ஆட்டும்.. 
அன்பானதே  பெட்டை நாயி தான்... காத்து ரெண்டும் நீட்டி கொண்டு...  நல்லா சடை எல்லாம்  வைச்சு தளுக்கெண்டு ஓடி வார நாய் குட்டி..
பெட்டை எண்டாப் போல ...????
ஏற்கனவே னநற  எண்டு ஒரு  நாய வீட்ல வளர்த்தேன்.. 
ஆரோ அதுக்கு வயித்தில அடிச்சு.. அது  கரகுட்டி போடும் போது செத்துப் போச்சு.. ஒரு நாள்.. 
அதோடே வீட்ல நாய மறந்தாச்சு..


பின்னேரம் அப்பா வந்தாப் போல கேட்டேன் ... 
'எங்கால அப்பா அந்த நாய் குட்டி ? '
'தெரியல்லமா .. யாரோ கொணந்து போட்ட குட்டி அது' 
'இந்த வீடு ஒரு நாய் வீடு எண்டு தான் ஊர் முழுக்க தெரியுமே. ' இது அம்மா..
'நாய் வளர்த்த என்னம்மா? '
நாய் வளர்த்த என்ன?  நாய் எண்டா ஒண்டுமில்ல ஏதேனும் பயனா இருக்க வேணும்.. சும்மா எட்டில பாட்டில இருக்குற நாய் எல்ல்லாம் வளர்த்த நாலு பேர் எதாவது சொல்லுங்கள்.. 
இவ்வள நாளும் நாய் இல்லையே இந்த வீட்ல ... இப்ப மட்டும் ஏன் ஆளாளுக்கு பெசுரியல்? கத தானே கேட்டனான்.. 
நடக்காது என்று தெரிகிறது.. 

 வழமையாக Dew வாழ்ந்த போது கேட்கும் வசைவுகள் ..
' உள்ள பொடியன் நாய் முழுக்க வீட்ட தான் வருது '
'உந்த நாயலாள இரவெல்லாம் தூங்க ஈலாது..
'உங்கட நாயால  தெருவால போக ஏலாது '
'தெரு முழுக்க நாய் தான் நிக்குது.. '
பின்னேரம் பால் வைச்சு இருந்தத கண்ட அம்மா சொன்னா..
' தயவு செஞ்சு சாப்பாடு மட்டும் வைக்காத .. பிறகு கரைச்சல்..' இல் நிச்சயம் எரிச்சல்  இருந்தது.. 
 


பின்னேரம் வீட்டில தண்ணி அள்ள  வந்த தேவி அம்மா சொலிக்கொண்டு போற 
' சிக்.. ஏனடி பிள்ளையால் இந்த வீடு முள்ளுக நாயள் 
உங்களுக்கு அருவெறுப்பு வரேல்லையே '
'ஏனுங்கோ நாஎண்ட  போல அருவேருக்கொனுமே..'
அவ ஏன் கேட்டாவோ எனக்கு தெரியாது..ஏன் உவயொருத்தரும் நாய் வளக்குரல்லையே.. ஆற்றையும் வீட்ட வரும் போது உந்த நடிப்பு. இப்படிதான் கொஞ்சம் கொஞ்சமாக அந்த பெட்டநாய் dew உம் ஊருக்கே எதிரியாப் போனது..

இங்கிலீஷ் கிளாஸ் கு போகனுமெண்டு அத்தை வீட்டுக்கு போய்டேன்.. 
திரும்பி வர 2 நாள் ஆகும்..சனி.. ஞாயிறு வகுப்பு.. 
நாய் குட்டி என்ன ஆகுமேண்டு யோசிச்சேன்..
பக்கத்து வீட்டு பிள்ளயட்ட சும்மா சொல்லிப் பார்த்தேன்.. அதுக்கு விளப்பமில்ல..  வெளிக்கிட்டன்..
ரெண்டு நாளும் அதிண்ட நினைவு தான்.. பாவம் ஒரு சீவன்.. பசியில வாடுமோ?? 
தாய் நாய் வந்து பால் குடுக்குமோ.. எங்கயாவது எழும்பித் திருஞ்சு சரி.. சாப்பிடுமோ..
எப்படியும் செத்திடும்.. முடிவு கொண்டேன்.. அதுவே அதுக்கு பாதுகாப்பு.. 
இந்த நாய் குட்டி எப்படி உலகத்துல வாழும்?? கஷ்டம் தான்.. ஒரு பெட்டை நாய்..  எல்லார் காலுக்கையும் மிதி பட்டு.. வரறு பட்டு.. சிக்கு பட்டு.. எச்சில் சாப்பாட்டுக்காக .. அலைஞ்சு.. திரிந்சு.. அடி வாங்கி.. கடி வாங்கி.. இன்னொரு தடவ இதும் குட்டி வாங்கி.. இதையே அதும்.. தப்போ சரியோ எதுவு மற்று.. வாழ்க்கை வாழ வைக்கிறது.

எங்கேயோ இருந்து கொண்டு வீட்டில் இருக்கும் நாய்குட்டி செத்துப் பொய் அடுத்த பிறப்பில் ஒரு பொடியன் நாயாகவோ இல்லை ஒரு போமறேமியன் நாயாகவோ பிறக்க வேண்டிக்கொள்கிறேன்..  ஜில் என்ற வாழ்வு இல்லை ஜங் என்ற வாழ்வு..  போமறேமியன் நாயை யாரும் வெறுப்பதில்லை.. அது அழகானது..  அதோடு பணமும் தரும்..


 
குழப்பமான எண்ணங்களுடன் குழம்பியிருந்தேன். ஒரு உயிர் சாக வேண்டுமென்று எப்படி விரும்புகின்றேன்??? 
அது என்ன வீணாக படைக்கப்பட்டதா??  வாழ வழியே இல்லை  என்றாலும்  அதை சா என்று எப்படி நிர்பந்திக்கிறேன்? எதற்காக வேண்டுகின்றேன்?? அதன் வாழ்விலும் சாவிலும் எதற்கு கரிசணை.. ஐம்புலன்களை இழந்து ஒரு உயிர் மண்ணில் மடிவதை அத்தனை இலகுவாக எடுத்துக் கொள்கிறேன்..  ??

சாகட்டும்.. 
Death is divineநு  ஓஷோ சொல்லிருக்காரு.. 
மரணம் தெய்வீகமானது... 
அழகானது.. அது எல்லாரையும் பாராபட்சமின்றி தன்னோடு அணைத்துக் கொள்ளும்..  
எல்லையில்லாத அமைதியை அது தனக்குள் எடுத்துக் கொள்ளட்டும்... அது சாவதற்கு ஆயிரம் காரணங்கள் கொடுத்து விட்டேன்.. ஆகையால் செத்திருக்கும்..
கொஞ்சம் தெளிவுற்று தூங்கிப் போய்விட்டேன்..

அடுத்த நாள் .. திங்கள். வீட்ட வார வழியிலேயே ... அது ரோட்டில படுத்து இருந்தது.. 
செத்திருக்குமோ எண்டு நினைச்சன்..   இருக்கட்டும்..  சில நேரம் உண்மைலேயே செத்துருக்குமோ ?? பசிச்சு இருக்கும்.. நேத்து எல்ல்லாம் சாப்பாடு இல்ல தானே. தாய் நாய் வரவும் இல்ல..  வந்திருக்குமோ தெரியல்லஇ  பேசாம கிடக்குது.. செத்துப் போச்சோ..  கிட்ட  போய் பார்பமோ?? .. அசைவு இல்ல.. அய்யோ.. செத்துப்போய்ச்சுதோ??  என்ற ஆண்டவா!!  அத்தனை தைரியமும் உடைந்து போக.. கண்ணீர் ...  
பாக்கவும் பயமா இருக்கு.. அசைவு ஒண்டையும் காணயில்ல..  சட்டென்று அருகில் போய் அதன் மூக்கருகில் குனிந்து பார்த்தேன்..
வயிறு வெம்முது.. சாகவேயில்லை.. திடுக்கென்றிருந்தது...! 
Views: 829