தன்னம்பிக்கை

எழுத்தாளர் : கா. ஏஞ்சலீன்மின்னஞ்சல் முகவரி: sundarmsngel1122@gmail.comBanner

நீ செல்லும் பாதையில் தவறி விழுந்தாயா? - இல்லை
கால் குத்திய முள்ளால் 
விசனமடைகிறாயா?

கூட வந்தவர்கள் பாதியில் சென்று விட்டார்கள் என்று 
கவலையடைகிறாயா ? - இல்லை
யார் கூட வருவார் என்று
குழம்புகிறாயா?

மதிகெட்ட மானிடா
மாயை கண்டு மதி மயங்கினாயா?
இன்னும் புரியவில்லையா
இது மாறுகின்ற உலகமென்று

இன்னும் ஒன்றும் நடந்துவிடவில்லை
நீ போக வேண்டிய தூரம் வெகு தொலைவு உள்ளது

விழுந்தால் அழதே எழுந்திரு
தோற்றால் புலம்பாதே போராடு
ஏமாந்தால் ஏங்காதே வாழ்ந்து காட்டு
கிடைக்காவிட்டால் வருந்தாதே அடைந்து காட்டு
என்றும்  நினைவில் கொள்
உயிரே போகும் நிலை வந்தாலும் 
தன்னம்பிக்கை மட்டும் இழந்து விடாதே


Views: 629