நீலப் பசுமை

எழுத்தாளர் : யாழினிமின்னஞ்சல் முகவரி: yalinsha02@gmail.com



Banner

 புத்தாண்டில் புகுத்திவிட துடிக்கும்

புதுமைகளோ?!-  இல்லை.

புராதன காலத்து முறைமை ஒன்றிற்கு

புத்துயிர்ப்பு தந்திடலாம் வாரீர்!

 

பாரிற்கு உணவு தரும் ‘உழவு’தனைப்

பக்குவமாய்க் காத்திட வேண்டியே

ஊர் திரண்டு வாருங்கள்...

ஊழலற்ற ‘இயற்கை’ விவசாயத்திற்கு!

 

‘ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்

நீரினும் நன்றதன் காப்பு’- என்று

இயற்கை விவசாயம் விளம்பினான்

இருவரிக் குரல்தனில் அன்றே!

 

விஞ்ஞானத்தின் சாபங்களில் ஒன்றாம்

விசிறிக்கொள்ளும் உரங்களும் நாசினிகளும்

‘சாகுபடியை அதிகரிக்குமாம்’ என்றார்கள்...

‘சாத்தான்’ ஆகிறது மண்ணிற்கும் மனிதனிட்கும்!

 

மண்புழுக்களும் நல்லுயிரிகளும்

மாண்டு போகின்றன பீடைகளுடன்

‘தரமான விளைச்சலாம்’ என்றார்கள்...

‘தரிசு நிலமா’வதை அறியாமலே!

 

வீசிய இரசாயணங்களையே

விளைச்சலாக அறுவடை செய்து

விருந்துண்டு மகில்கின்றோம்...

விளைவு நோய்களும் மரணமும் என்றுணராமல்!

 

வேம்பு, கூட்டெரு, மண்புழு என்னும்

வேளாண்மையின் நண்பர்களுடன் இணங்கி

வியத்தகு விளைச்சல் காண்போம்!

விளைநிலத்தைப் பாதுகாப்போம்!

 

குறைவற்ற செல்வத்துடன் நோயற்ற வாழ்வு காண்போம்!


(இயற்கை விவசாய வாரம் 8-1-2017 முதல்   14-1-2017)

 

 

 

Views: 566