ஒரு புள்ளியும் ஒரு பூஜ்ஜியமும்

எழுத்தாளர் : விபிசன் மின்னஞ்சல் முகவரி: vibishan.don@gmail.comBanner

இது செவ்வனே ஆக்கப்பட்டதொரு முடிவிலிச்சுழற்சி..
இதில் யுகங்கள் முடிவிலிகளாக இரட்டிக்கின்றன..
இதில் வரலாறுகள் எழுதப்பட இருக்கின்றன..
எழுதப்பட்ட வரலாறுகள் நிகழ்த்தப்பட இருக்கின்றன..
எங்களின் அமரத்துவங்களாக வரலாறுகள் மட்டுமே உருக்கொள்கின்றன..

எங்களின் சிரிப்புக்களும் சிந்தனைகளும் நடந்து முடிந்தவை..
திரும்ப நடத்தப்பட இருப்பவை..
இன்று அழுதீர்களானால் நாளையும் அழுவீர்கள்..
இன்று சிரித்தீர்களானால்
நாளையும் சிரிப்பீர்கள்..
இங்கே ஹிட்லரும் இயேசுவும் மீண்டும் மீண்டும் பிறப்பார்கள்..
புண்ணியக்கணக்குகளும்  பாவக்கணக்குகளும் சேர்த்தே எரிக்கப்படும்..

பிழைத்துக் கொள் மனிதா..
வரலாற்றில் கொலைகளுக்கும் கொள்ளைகளுக்கும் தண்டனைகள் எழுதப்படவில்லை..
உன் மரணம் உன் நினைவை சூனியமாக்கப் போகிறது..
நினைவுள்ள நேரம்
உன் வரலாற்றை சிவப்பு மை கொண்டு அழகாக அமைத்து விடு..
ஏனென்றால் வரலாறுகள் மீண்டும் நிகழ்த்தப்பட உள்ளன..

Views: 218