தாய் தின்ற மண்ணே

எழுத்தாளர் : சி. ரஜீபன்மின்னஞ்சல் முகவரி: ssrajeepan@gmail.comBanner

சில அனுபவங்கள் நம்மை வாழ்வின் சில புதிய தேடல்களிற்கு இட்டுச்செல்கின்றன. என் வாழ்வில் பேராதனை பல்கலைக்கழகம் தந்த புதிய நண்பர்களுக்கும் அது தந்த அனுபவங்களும் வித்தியாசமானவை. பல்கலைக்கழகத்தில் காலடி எடுத்து வைத்தபோது ஒரே குட்டையில் ஊறிய மட்டையாக யாழ்ப்பாணம் தவிர்ந்த வேறு மாவட்ட தொடர்போ சிங்கள மொழியில் தேர்ச்சியோ இல்லாமல் புது முக மாணவனாக உள்நுளைந்தேன். நமக்கு பல நண்பர்களை மட்டுமல்ல நல்ல பட்டறிவையும் அள்ளித்தந்தது பேராதனை.

சரி விடயத்திற்கு வருவோம்.....

பல்கலை வந்த ஆரம்ப நாட்களில் சகோதரன இன நண்பர்களுடன் புதிதாக பழகும் வாய்ப்பும், அவர்களுடன் உரையாடும் சில சந்தர்ப்பங்களும் , மொழி புரியாமல் நாங்களும் எம் சிங்கள நண்பர்களும் அரைகுறை ஆங்கிலத்தில் கலந்துரையாடுவதும், சில புரியாமல் தலையை ஆட்டி பல்லிளிப்பதும் தொடர்கதை. இப்படியாக காலங்கள் நகர நகர நாமும் எம் சகோதர இன நண்பர்களுடனான நெருக்கமும் ஒரே தட்டில் சோறு உண்பதும், மெல்ல மெல்ல அரசியல் வரலாறு என உரையாடல்கள் நீள்வதும், சில கருத்து மோதல்கள் பின்பு சமாதானம் என இனிமையாக நகர்ந்து கொண்டிருந்தது . மாலைப் பொழுதுகளில் நம் கண்டீன் வடையும் தேனீர் கோப்பையுடனும் விடுதி கல் வாங்குகளில் அரட்டை அடிப்பது வழமை. இப்படியாக நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தபோது ஒருநாள் நானும் நண்பன் துவாரகனும் அம்பாந்தோட்டையை சேர்ந்த சிங்கள நண்பனும் கதிர்காமம் பற்றி அளவளாவிக்கொண்டிருந்தோம். அப்போது சிங்கள நண்பன் எமை நோக்கி ' மச்சான் கதறகம தெய்யோத் எக்க மொன சம்பந்த தியன்னே உம்பலாட'  (மச்சான் கதிர்காம கந்தனுடன் உங்களுக்கு என்ன சம்பந்தம் ?) இந்த கேள்வி எங்களை துக்கி வாரிப் போட்டது. உண்மையில் அவன் அறியாமையில் கேட்ட கேள்வி அது. நாங்கள் எவ்வாறு புரிய வைப்பது அவர் தமிழ் கடவுள் முருகனென்று. ' அப்பி ஹிந்துனே ' (நாங்கள் இந்துக்கள் ) என்று பதிலளித்தோம். ஏனெனில் அவனுக்கு
விளங்க வைக்க எங்களிடம் போதுமான வரலாற்று அறிவு அப்போது இருக்கவில்லை. 

இது எங்களுக்கு வரலாறு மீதான தாகத்தை அதிகரித்தது. படிப்படியாக வரலாற்று புத்தகங்களை ஆராய்வதும், இணைய வழி தேடல்களும் புது புது வரலாறுகளை பரிசளித்தன. இது பல வரலாற்று முரண்களையும், சில வரலாறுகள் பக்கசார்பாய் இருப்பதையும் புடம்போட்டு காட்டின. இத்தேடல் கதிர்காமம், தொண்டீச்சரம்,நந்தீச்சரம்,சீதாவக்கை, கடலோட்டு காதை,செண்பக பெருமாள்,முன்னேச்சரம்,பொம்பரிப்பு........ என விரிந்து சென்றன. உண்மையில் சிங்களவர்களை மட்டுமல்ல தமிழர்களையும் ' மகாவம்ச மனோபாவம் ' முற்றாக ஆக்கிரமித்திருக்கின்றது. உதாரணமாக துட்டகைமுனு தன் தாயை நோக்கி ' மகாகங்கைக்கு அப்பால் தமிழர்கள் கீழே சமுத்திரம் கை, கால்களை நீட்டி தாராளமாய் படுப்பது எங்கனம் ' எனும் வரலாற்று புனைவுகளை நமட்டு சிரிப்புடன் நாம் ஏற்றுக் கொள்வதும் ஒருவிதமான தமிழன்டா வகையறா மகாவம்ச புரிதலே. அதேபோல் துட்டகைமுனு போரிட்டு வெல்வதை கொண்டாடுவதும் சிங்கலே வகையறா மகாவம்ச புரிதலே. உண்மையில் சிங்களமொழி துட்டகைமுனு காலத்தில் விருத்தியடைந்தே இருக்கவில்லை. அப்போர் பௌத்த இந்து மதங்களுக்கு இடையிலான அதிகார போர்.

உண்மையில் தமிழர்களிடையே வரலாற்று ஆவணப்படுத்தல் மிக குறைவு சில வேளை அவை அழிக்கபட்டும் இருக்கலாம். சில பக்கசார்பானவை. ஆனால் சிங்களவர்கள் வரலாற்றை ஆவணப்படுத்துவது அதிகம் உதாரணமாக தீபவம்சம், மகாவம்சம், சூளவம்சம், முக்கர கட்டன, கோகில சந்தேச......... என நீண்டு செல்கிறது அப்பட்டியல். நல்லூர் கந்தசுவாமி கோவிலை கட்டிய செண்பக பெருமாள் என்கிற புவனேகபாகு யார் என்பதையும் அவனுக்கும் கண்ணகி வழக்குரை (துரியோட்டு காதை) யில் வரும் மீகாமன், வெடியரசனுக்கிடையிலான வரலாற்று தொடர்புகளையும் முக்கர கட்டன மற்றும் கோகில சந்தேச இலக்கியங்கள் மூலம் இலகுவாக விளங்கிக் கொள்ள முடியும். உண்மையில் என்னதான் வரலாற்றை இருட்டடிப்பு செய்து மாகாவம்சம் மூலம் வெள்ளையடிக்க முற்பட்டாலும் பண்டய கல்வெட்டுக்களும், பயணிகள் குறிப்புக்களும், ஐரோப்பிய ஆவணங்களும் தமிழர் இருப்பை உறுதி செய்கின்றன.

ஆனால் நாமோ எம் பண்டைய அடையாளங்களை அழித்தும், கோயில் புனரமைப்பு என்ற போர்வையில் பண்டய கட்டுமானங்களை சிதைத்து அழித்து வருகின்றோம். உண்மையில் பழமையான கட்டுமானங்களை பேணி பாதுகாத்து அடுத்த சந்ததியினர் கையில் கொடுப்பதே நாம் அவர்களுக்கு செய்யும் உபகாரம். வரலாறு தொடர்பான சுவாரசியமான பகுதிகளை அறிந்து கொள்ள பண்டைய குறிப்புக்களும் நுல்களும் உதவுகின்றன.

ச்சே மீண்டும் பழைய பல்லவி...

காலப் பயணம் சாத்தியமா என சிந்தித்து கொண்டிருக்கும் இந்த கால கட்டத்தில் கால பயணம் என்பது கடந்தகாலத்திற்கு பொருட்களை அனுப்புதல் அல்லது எதிர்காலத்திற்கு பொருட்களை அனுப்புதல் ஆகும். காலப் பயணத்தை மேற்கொள்வதற்குரிய எந்த தொழில்நுட்ப சாதனமும் பொதுவாக கால இயந்திரம் என்று குறிப்பிடப்படுகிறது. ஆம் காலப் பயணம் சாத்தியமே. பண்டைய நுல்களும் ஏடுகளும் சிறந்த கால இயந்திரங்களே. அவை நம்மை கடந்தகாலத்திற்கு அழைத்து செல்லும். இலங்கையுடனான ஒரு வரலாற்று ( An Historical Relations the Island Ceylon) ரொபேட் நொக்ஸ்சின் இலங்கையுடன் ஒரு வரலாற்று தொடர்பு ( An Historical Relations of the Island Ceylonயுn ) எனும் புத்தகத்தை வாசிக்கும் போது நீங்கள் உணர்ந்து கொள்ளலாம்.17ம் நூற்றாண்டில் இப் புத்தகம் அதே நூற்றாண்டில் வாழ்ந்த ரொபேட் நொக்ஸ் எனும் ஆங்கிலேயரால் எழுதப்பட்டது.

கிழக்கிந்தியக் கம்பெனியின் கப்பல் மாலுமியான அவர் தனது சொந்த அனுபவங்களை விபரித்துள்ளார். இவர் தனது தந்தையுடனும் வேறு சில பிரித்தானியர்களுடனும் வணிகம் செய்ய ஆசிய நாடுகளை நோக்கி வந்தார். எதிர்பாராத விதமாக கொட்டியார துறையில் தரையிறங்கிய இவர்கள் இரண்டாம் இராஜசிங்கனால் கைதுசெய்யப்பட்டு கண்டிக்கு அழைத்து செல்லப்பட்டனர். பின் அங்கே கைதியாக 19 வருடங்கள் வாழ்ந்தார். பின் அங்கிருந்து நண்பனுடன் தப்பித்து அனுராதபுர காடுகளுடாக மன்னார் அரிப்பு கோட்டையை அடைந்தார்.பின் அங்கிருந்து இங்கிலாந்து சென்றடைகிறார்கள். இதுவே இப் புத்தகத்தின் சாராம்சம். ஆனாலும் 19 வருடங்கள் தான் கண்டவை மற்றும் கேட்டறிந்தவைகளையும், அங்குள்ள மக்களின் வாழ்க்கை முறையையும் கண்முன்னே நிறுத்தியிருப்பார் நொக்ஸ். உண்மையில் இப் புத்தகத்தை வாசிக்கும் போது கால பயணம் செய்து 17ம் நூற்றாண்டில் கண்டி வீதிகளில் உலாவித்திரிந்த அனுபவங்களும் அக்கால மக்களுடன் வாழ்ந்த அனுபவங்களும் கிடைக்கும்.

இரண்டாம் இராஜசிங்கன் போர்த்துக்கேயருக்கு எதிராக பல வெற்றிகளை ஈட்டியவன். ஆனாலும் பல கொடுமைகள் புரிந்ததால் சிங்களவர்கள் அவனுக்கு எதிராக கலகம் புரிந்தனர். இவற்றை மட்டுமல்ல அன்றைய கண்டிய மக்களின் வாழ்க்கை முறையை, பழக்க வழக்கங்களை, அங்குள்ள உயிரினங்களை, தாவரங்களை, தமிழர் வாழ்ந்த பகுதிகளை, இராஜசிங்கன் மனைவியான தமிழச்சியை, இன்னும் பல......

ரொபேட் நொக்ஸ் 1641இல 2 வது குழந்தையாக பிறந்தார்......

டக் டக் டக்.. என்னுடைய அறைககதவு தட்டப்படுகிறது..... ரஜீபன் இன்னவாத? என்கிற கேள்வியுடன்

கெஞ்சம் பொறுங்கள் வாசகர்களே பார்த்துவிட்டு மீண்டும் வருகிறேன். மீண்டும் நொக்ஸ்சுடன் இலங்கை நோக்கி பயணிக்கலாம்.

Views: 402