முகநூல் போராளியும் முந்நூறு ரூபா டேற்றாவும்

எழுத்தாளர் : ஆதிரன்மின்னஞ்சல் முகவரி:Banner

சமூக வலைத்தளத்தில் - சதா

சமராடும் உங்களிடம்

ச(சா)த்தியமான ஒரு வினா
அப்போதெல்லாம் நீர் எங்கிருந்தீர்?

வெட்டி கதைகளும்
வீணாய்ப் போன
வியாக்கியானங்களும் - அப்போ
தொட்டிலில் இருந்ததெல்லாம்
கெட்டியாய் முழங்குது இங்கே.

அன்றெல்லாம் தூற்றியோர் யாரெனில்
அண்டி வாழ்ந்தவரும்
ஒண்டி பிழைத்தவனும்
சண்டித்தனமாய்
ஓடு கழற்றியவனும்
வண்டுகளாய் ஊரலைந்து
உளவு சொன்னவனும்..

கூடவே இன்றெல்லாம் தூற்றுது
யாரென்று பார்த்தால்
அற்ப சலுகைக்கு
அம்மணமாய் விலை போனவரும்
அடிமுடி அறியாத
அரசியல் அடிவருடிகளும்

வரலாறு தெரிந்திட்டால்
வருவதை நீ அறிந்திடுவாய்
வல்லமை என்பதெல்லாம் - வெறும்
வாய்ச்சொல்லில் மட்டுமில்லை.

முண்டு கொடுப்பதே
தொண்டு எனக்கருதினால்
விடிவு ஏது?
விமோசனம் ஏது?

முகமறியா மறவர்களும்
முத்துகளாய் இருந்த எம்மினத்தில்
முகநூல் போராளியாக
முந்நூறு ரூபாய்க்கு டேற்றா போதும்..

Views: 67