அவள்

எழுத்தாளர் : குட்டா செல்வாமின்னஞ்சல் முகவரி: sugankey12@gmail.comBanner

என் நீண்ட கால தோழி 
சில மாதங்களில் விடை பெறுவாள்
அடிக்கடி கூறுவதுண்டு 
ஒரே வீட்டில் வாடகைக்கு தான் இருந்தோம் என்று
தூரம் இனி தான் தெரியத் தொடங்கும்
உடைந்த பொழுதுகளில் என்னை எனக்கே ஒட்டிக் கொள்ள கற்றுத்தந்தவள்
இருளின் மிரட்சியின் சிநேகம் அவள்
சாத்தனின் காதலும் அவள்
சூனிய பிரதேசங்கள் எல்லாம் காணாமல் போகும் ஒரு நாளில்
அவள் விடை பெறக்கூடும்
அவளற்ற நிலை என்பது
வேர்கள் அற்ற மரமே..
Views: 76