உவங்களை பற்றி இவங்களிடம் இருந்து.....!

எழுத்தாளர் : உவங்கள்மின்னஞ்சல் முகவரி: editor.uvangal@gmail.comBanner

உவங்களின் உறவுகள் அனைவருக்கும் எமது வணக்கங்கள். கடந்த காலத்தில் இரண்டு ஆண்டுகள் தொடர்ச்சியாக உங்களை சந்தித்து வந்தோம். எனினும் தவிர்க முடியாத சில காரணங்களுக்காக கடந்த இருவருடங்கள் எம்மால் எமது இலக்கிய முயற்சிகளை வெளிப்படுத்த முடியாது போனது. அதற்கான மன வருத்தத்தை தெரிவிப்பதோடு இனிவரும் காலங்களில் உவங்களை தவறாது வெளிக்கொணர்வோம் என்ற உறுதியை உங்களுக்கு வழங்குகின்றோம்.


உவங்களின் ஆரம்பம் ஓர் கார்த்திகை மாதத்தில் கருக் கொண்டு வெளிவந்தது. இம்முறை வைகாசி மாதத்தில் புதிய உத்வேகத்துடன் தனது பயணத்தை தொடங்குகிறது.

உவங்களின் பாதையில் இன்றைய நாள் மிகவும் முக்கியமான நாள். கடந்த காலங்களில் நீங்கள் எமக்கு வளங்கிய பங்களிப்பையும் விமர்சனக்கருத்துகளையும் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம். எம்மை வளப்படுத்துவதற்கு உதவிய உங்கள் கருத்துகள் மிக முக்கியமானது என்பதை நாம் மறக்கவில்லை. 

இம்முறையும் பல எழுத்தாழுமைகளுடன் கை சேர்த்து வருகிறோம். கடந்த காலத்தில் உவங்களில் பங்கு கொண்ட அனைத்து எழுத்தாழுமைகளுக்கு எமது நன்றிகள் உவங்களில் உங்களின் பங்களிப்பு அளப்பரியது. கடந்த காலத்தில் நீங்கள் வழங்கிய பங்களிப்பை போன்று பல மடங்கு பங்களிப்பையும் இனியும் நல்குவீர்கள் என நாம் நம்புகிறோம். அதே போன்று அட்டைப்படம் வழங்கிய அனைத்து ஓவியர்களுக்கும் உவங்கள் இணையப்பக்க வடிவமைப்பாளர்க்கும் எமது நன்றிகள்.


இம்முறை உவங்கள் இதழான சனம் 3 ஆள் 1 உங்களை மகிழ்விக்கும் என நம்புகிறோம். இம்முறை உவங்களுக்கு ஓவியத்தை வழங்கிய ஆ.மு அனீஸ் அவர்களுக்கும் அட்டை படவடிவமைப்பை மேற்கொண்ட துவாரகன் அவர்களுக்கும் நன்றிகள். 

தொடர்ந்தும்  இணைந்திருங்கள் உறவுகளே  
Views: 313